திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1558 | பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இனி வேறே நூறாயிரம் இதர விஷயங்கள் முகம் காட்டினாலும் அவற்றோடு செறியேன் – நான் நோவு படுகிற சம்சாரத்தில் நீயே முற்பாடனாய் வந்து நின்ற பின்பு அவற்றோடு பொருந்துமோ – ப்ரீதி அதிசயத்தாலே -ஒ -என்கிறார்) 1 | புள்ளாய் ஏனமுமாய் புகுந்து என்னை உள்ளம் கொண்ட
கள்வா என்றலும் என் கண்கள் நீர்கள் சோர்தருமால்
உள்ளே நின்று உருகி நெஞ்சம் உன்னை உள்ளியக்கால்
நள்ளேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-1 | பதவுரை Show / Hideபுள் ஆய் ஏனமும் ஆய் புகுந்து, Pul Aay Yenamum Aay Pugundhu - ‘ஹம்ஸரூபியாயும் வராஹ ரூபியாயும் என்னுள்ளே பிரவேசித்து (- (ஓ நறையூர் நின்ற நம்பீ!)) என்னை உள்ளம் கொண்ட கள்வா என்றலும், Ennai Ullam Konda Kalvaa Endralum - என உள்ளத்தைக் கவர்ந்து கொண்ட கள்வனே!’ என்று சொன்னவுடனே என் கண்கள், En Kangkal - எனது கண்களில் நின்றும் நீர்கள் சோர்தரும், Neerga Sortharum - கண்ணீர் பெருகுகின்றது : ஆல், Aal - அந்தோ!; நெஞ்சம், Nenjam - என்மனமானது உன்னை, Unnai - எம்பெருமானான உன்னை உள்ளியக்கால், Ulliyakkal - அநுஸந்திக்கப் புகுந்தால் உள்ளே நின்று உருகி, Ulle Nindru Urugi - உள்ளே பிடித்து நீராக உருகிப்போவதனால் உன்னை அல்லால், Unnai Allaal - (இப்படிப்பட்ட அன்புக்கு இலக்கான உன்னைத் தவிர்த்து (வேறொருவரையும்) நள்ளேன், Nalleen - நேசிக்கமாட்டேன். |