திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1559 | பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (புள்ளாய் ஏனமுமாய் புகுந்து -என்றார் கீழே –தாழ்ந்த ஜன்மத்தில் வேணுமாகில் பிறக்கிறாய் – நாட்டார் பிறக்கும் பிறவிகளில் பிறக்கல் ஆகாதோ – நாட்டில் நடையாடாத படியான நரசிம்ஹ ரூபத்தை யுடையையாய் – ஸ்ரீ நரசிம்ஹ வேஷ பரிக்ரஹம் பண்ணின அன்று தொடங்கி இவர் உடைய ஹிருதயத்திலே காணும் கிட்டுவது) 2 | ஓடா வாளரியின் உருவாய் மருவி என்தன்
மாடே வந்து அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா
பாடேன் தொண்டர் தம்மைக் கவிதை பனுவல் கொண்டு
நாடேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-2 | பதவுரை Show / Hideஓடா, Odaa - நாட்டில் எங்கும் நடையாடாத (- (ஓ நறையூர் நின்ற நம்பீ!- ;)) ஆள் அரியின் உரு ஆய், Aal Ariyin Uru Aay - நரஸிம்ஹரூபியாய் என்றன் மாடே வந்து மருவி, Endran Maade Vandu Maruvi - என் பக்கல்வந்து பொருந்தி அடியேன், Adiyen - அடியேனுடைய மனம், Manam - மனத்தை கொள்ள வல்ல மைந்தா, Kolla Valla Mainthaa - கவர்ந்து கொள்ளக் கூடிய மிடுக்கையுடையவனே! பனுவல் கவிதை கொண்டு, Panoval Kavithai Kondo - இலக்கணம் வழுவாத கவிகளைக்கொண்டு தொண்டர் தம்மை, Thondar Thammai - நீசர்களை பாடேன், Paadeen - பாடுவது தவிர்ந்தேன்; உன்னை அல்லால், Unnai Allaal - உன்னைத்தவிர (வேறொரு வரைக் கவிபாட) நாடேன், Naadeen - முயலமாட்டேன். |