திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1560 | பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அஞ்சனம் போலே ஸ்ரமஹரமான வடிவை உடைய உன்னை அல்லது புறம்பே சிலரை – இப்போது புறம்பாக நினைக்கிறது -புறம்புற்றை திருப்பதிகளை – எத்தனை வேணும் என்று ப்ரேரித்தாலும் ப்ரீதி புரஸ் சரமாக ஏத்துமது இல்லை) 3 | எம்மானும் எம் அம்மனையும் என்னைப் பெற்று ஒழிந்ததன் பின்
அம்மானும் அம்மனையும் அடியேனுக்காகி நின்ற
நல் மான ஒண் சுடரே நறையூர் நின்ற நம்பீ உன்
மைம்மான வண்ணம் அல்லால் மகிழ்ந்து ஏத்த மாட்டேனே –7-2-3 | பதவுரை Show / Hideஎம்மானும், Emmaanum - என் தகப்பனும் (- (நறையூர் நின்ற நம்பீ!- ;)) எம் அனையும், Em Anaiyum - என் தாயும் என்னை பெற்று, Ennai Petru - என்னைப் பிரஸவித்துவிட்டு ஒழிந்ததன் பின், Ozhindadhan Pin - நீங்கிய பின்பு அடியேனுக்கு, Adiyenukku - அடியேனுக்கு அம்மானும், Ammanum - தகப்பனும் அம்மனையும், Ammanaiyum - தாயும் ஆகி நின்ற, Aagi Nindra - தானேயாய்நின்ற நல், Nal - விலக்ஷணமாய் மானம், Maanam - பெருமைபொருந்தி ஒண், On - அழகியதான சுடரே, Sudare - தேஜஸ் ஸ்வரூபியே!, உன், Un - உன்னுடைய மை மானம், Mai Maanam - மைபோன்ற வண்ணம் அல்லால், Vannam Allal - திருமேனி நிறத்தையல்லது (வேறொன்றையும்) மகிழ்ந்து, Magizhndu - மனமுவந்து ஏத்த மாட்டேன், Aetha Maatten - துதிக்கமாட்டேன். |