திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1561 | பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சேராச் சேர்த்தியாக என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து அவ் வாலந்தளிர் அளவன்றிக்கே ஸ்ரீ பரம பதம் போலே இடம் பெற இருந்து என்னை உனக்காக்கிக் கொண்ட இம் மகோ உபகாரத்தை அறியாதே நான் க்ருத்க்னனாய் இருக்கிறேன் அல்லேன் – அவ்விடை யாட்டமும் அறிந்தே இருக்கிறேன் -உனக்கு உறைவிடம் இல்லாமை தான் செய்தாயோ நீ – உனக்கு அசங்குசிதமாக வர்த்திகைக்கு ஒரு ஸ்தானம் இல்லையோ -இத் தேசத்தை உடைய உனக்கு) 4 | சிறியாய் ஓர் பிள்ளையுமாய் யுலகு உண்டு ஓர் ஆலிலை மேல்
உறைவாய் என் நெஞ்சின் உள்ளே உறைவாய் உறைந்தது தான்
அறியாது இருந்தறியேன் அடியேன் அணி வண்டு கிண்டும்
நறைவாரும் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-4 | பதவுரை Show / Hideஅணி வண்டு, Ani Vandu - அழகிய வண்டுகள் (- (நறையூர், நின்ற நம்பீயோ!- ;)) கிண்டும், Kindum - குடையப்பெற்றதும் நறை வாரும், Nirai Vaarum - தேன் பெருகப்பெற்றதுமான பொழில், Pozhil - சோலையாலே சூழ், Sool - சூழப்பட்ட சிறியாயோர் பிள்ளையும் ஆய், Siriyaayor Pillaiyum Aay - மிகச் சிறுகுழந்தையாய் உலகு உண்டு, Ulaku Undu - உலகங்களை உட்கொண்டு ஓர் ஆல் இலை மேல், Or Aal Ilai Mel - ஒரு ஆலந்தளிரிலே உறைவாய், Uraivaay - பொருந்தியிருந்தவனே! என் நெஞ்சின் உள்ளே உளைவாய், En Nenjin Ullae Ulaivaay - எனது நெஞ்சுக்குள்ளே வஸிப்பவனே! உறைந்தது தான், Uraindhadhu Thaan - (நீ இப்படி என்னெஞ்சினுள்ளே) வாஸஞ்செய்தருள்வதை அடியேன், Adiyen - அடியேன் அறியா திருந்தறியேன், Ariyaa Thirundhariyeen - தெரிந்துகொள்ளாமலிருக்கவில்லை |