திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1564 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1564பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நீ போகில் நான் முடிவன் -என்கிறார் – இத்தலை இழக்க வரும் அளவில் -இட்ட அடி பேர்க்க மாட்டான் – நீர் வளைக்கிறது என்ன மிடுக்கு கொண்டு என்ன – நீர் குற்றம் கண்டு கை விடப் பார்க்கும் அன்றும்ந கச்சின் ந அபராத்யதி -என்னும் அவள் அன்றோ அருகே இருக்கிறாள்) 7
மன்னஞ்ச வாயிரம் தோள் மழுவில் துணித்த மைந்தா எந்நெஞ்சத்து உள்ளிருந்து இங்கு இனிப் போய் பிறர் ஒருவர் வன்னெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன் வளைத்து வைத்தேன் நன்னெஞ்சம் அன்னம் மன்னும் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-7
பதவுரை Show / Hide
நல் நெஞ்சம், Nal Nenjam - (அடியார் திறத்தில்) நல்ல ஹ்ருதயத்தை யுடையளான (- (நறையூர், நின்ற நம்பீயோ!- ;))
அன்னம், Annam - அன்ன மென்னடையாளான பிராட்டி
மன்னும், Mannum - பொருந்தி வாழ்கிற
மன் அஞ்ச, Man Anja - க்ஷத்திரியர்களெல்லாரும் அஞ்சும்படியாக
ஆயிரம் தோள், Aayiram Thol - (கார்த்த வீரியார்ஜுநனுடைய) ஆயிரந் தோள்களையும்
மழுவின், Mazhuvin - கோடாவிப்படையினால்
துணித்த, Thuniththa - அறுத்தொழித்த
மைந்தா, Maindha - மிடுக்கனே?
என் நெஞ்சத்துள், En Nenjaththul - எனது நெஞ்சினுள்ளே
இருந்து, Irundhu - இருந்து வைத்து
இனி, Ini - இனிமேல்
இங்கு போய், Ingu Poi - இங்கு நின்றும் வேறோரிடம்போய்
பிறர் ஒருவர், Piraar Oruthar - வேறொருவருடைய
வல் நெஞ்சம், Val Nenjam - கடினமான நெஞ்சிலே
புக்கு இருக்க, Pukku Irukka - புகுந்திருக்க
ஒட்டேன், Ottaein - ஸம்மதிக்கமாட்டேன்;
வளைத்துவைக்கேன், Valaithuvaikken - தடைசெய்கின்றேன்.