திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1570 | பெரிய திருமொழி || (7-3–சினவில்) (திரு நறையூர் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவர் உடைய திரு உள்ளம் ஒழிய வேறு ஓர் இடம் உண்டாக நினைத்து இருக்கிறிலன் – பின்னை அவ்வோ இடங்களிலே இவன் இல்லையோ என்னில் சௌபரி பல வடிவு கொண்டு அனுபவித்தால் போலே இதுக்கு அவ்வருகு இல்லை என்னலாம் படி அவன் முகம் கொடுத்துக் கொண்டு இருந்த படி – எனக்கு ஜனகன் ஆனவனை-என்னுடைய குல நாதன் ஆனவனை – தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை எனக்கு பிரகாசிப்பித்த மகா உபாகாரகனை – எத்தால் மறக்கேனே –பண்ணின உபகாரம் அளவுபட்டு மறக்கவோ நான் இட்ட பச்சையை நினைத்து ஆறி இருக்கவோ-எவ்வழியால் மறப்பது) 3 | வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான் மற்றோர் நெஞ்சு அறியான் அடியேனுடைச்
சிந்தையாய் வந்து தென் புலர்க்கு என்னைச் சேர் கொடான் இது சிக்கெனப் பெற்றேன்
கொந்துலாம் பொழில் சூழக் குடந்தைத் தலைக் கோவினைக் குடமாடிய கூத்தனை
எந்தையை எந்தை தந்தை தம்மானை எம்பிரானை எத்தால் மறக்கேனே –7-3-3 | பதவுரை Show / Hideவந்த நாள் வந்து, Vandha Naal Vandhu - தானாகவே என்னை ஸ்வீகரிக்க எழுந்தருளின நாளிலே எழுந்தருளி என் நெஞ்சு, En Nenju - எனது நெஞ்சை இடம் கொண்டான், Idam Kondaaan - இருப்பிடமாகக் கொண்டான்; மற்று ஓர் நெஞ்சு அறியான், Mattru Oor Nenju Ariyaan - வேறொருவருடைய நெஞ்சையும் தனக்கு இருப்பிடமாக நெஞ்சிலும் நினைக்கின்றிலன்; அடியேனுடை, Adiyeenudai - அடியேனுடைய சிந்தை ஆய் வந்து, Sindhai Aay Vandhu - மநோரதங்களைத் தானுடையனாய் வந்து என்னை, Ennai - அடியேனை தென்புலர்க்கு சேர் கொடான், Thenpularkku Seer Kodaan - யமபடர்கையில் காட்டிக்கொடாதே விஷயீ கரித்தருளினான், இது, Idhu - இதனை சிக்கன, Sikkan - திடமாக பெற்றேன், Pettren - லபித்தேன்; (ஆன பின்பு.) கொந்து உலாம் பொழில் சூழ், Kondhu Ulaam Pozhil Soozh - பூங்கொத்துக்கள் நிறைந்த சோலைகளினால் சூழப்பட்ட குடந்தைத் தலை, Kudandhaith Thalai - திருக்குடந்தையில் (எழுந்தருளியுள்ள) கோவினை, Kovinai - ஸ்வாமியும் குடம் ஆடிய கூத்தனை, Kudam Aadiya Kooththanai - குடக் கூத்தாடினவனும் எந்தையை, Endhaiyai - எனக்குத் தந்தையும் எந்தை தந்தை தம்மானை, Endhai Thandhai Thammaanai - என் முதுகுரவர்க்கும் ஸ்வாமியுமான எம்பிரானை, Embiraanai - (திருநறையூர்) நம்பியை எத்தால், Eththaal - எக்காரணம் பற்றி மறக்கேன், Marakken - மறப்பேன் (மறக்கமுடியாது.) |