திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1573 | பெரிய திருமொழி || (7-3–சினவில்) (திரு நறையூர் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இதுக்கு முன்பு ஒதப் போகாதவன் அபி நிவிஷ்டனாய் ஓதுமா போலே சாந்தீபநீயோடே சாதாரமாக நாலு வேதத்தையும் அப்யசித்த பண்டிதனை – இவ்வதாரத்துக்கு நாற்றங்காலாயக் கொண்டு ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின நீர்மை உடையவனை அல்லது பாடல் செய்யேன்) 6 | எட்டனைப் பொழுதாகிலும் என்றும் என் மனத்து அகலாது இருக்கும் புகழ்
தட்டலர்த்த பொன்னே யலர் கோங்கின் தாழ் பொழில் திருமால் இரும் சோலை அம்
கட்டியைக் கரும்பு ஈன்ற இன் சாற்றைக் காதலால் மறை நான்கு முன்னோதிய
பட்டனைப் பரவைத் துயில் ஏற்றை என் பண்பனை அன்றி பாடல் செய்யனே –7-3-6 | பதவுரை Show / Hideஎள் தனை பொழுது ஆகிலும், El Thanai Pozhuthu Aagilum - எள்ளத்தனை நொடிப் பொழுதுங் கூட (- (மற்றொருவரையும்)) என் மனத்து அகலாது, En Manathu Akalathu - என் மனத்தைவிட்டுப் பிரியாமல் என்றும், Endrum - எக்காலத்திலும் இருக்கும், Irukkum - என் மனக்தே யிருக்கையினாலாகிய புகழ், Pugazh - கீர்த்தியையுடையவனும் தட்டு அலர்த்த, Thattu Alarttha - தட்டுப்போலே விகஸிப்பிக்கப்பட்ட பொன் ஏய் அலர், Pon Aey Alar - பொன் போன்ற அலரை யுடைத்தான கோங்கின், Kongin - கோங்குமரங்களினுடைய தாழ் பொழில், Thazh Pozhil - தழைத்த தோப்புகளையுடைய தருமாலிருஞ் சோலை, Tharumalirunj Cholai - திருமாலிருஞ்சோலையிலெழுந் தருளியிருக்கிற அம் கட்டியை, Am Kattiyai - மதுரமான கற்கண்டுபோல் போக்யனாயிருப்பவனும், கரும்பு ஈன்ற இன் சாற்றை, Karumbu Eendra In Sattrai - கரும்பில் நின்று முண்டான இனிய ரஸம்போன்றவனும், முன், Mun - முற்காலத்தில் காதலால், Kaadhalal - அன்புடனே மறை நான்கும், Marai Naankum - நால்வேதங்களையும் ஓதிய, Othiya - (ஸாந்தீபிநி பக்கலில்) அத்யயனம் பண்ணின பட்டனை, Pattanai - பண்டிதனும் பரவை, Paravai - (திருப்பாற்) கடலில் துயில், Thuyil - கண்வளர்ந்தருளினாநின்ற ஏற்றை, Aetrai - பரமபுரஷனும் என் பண்பனை அன்றி, En Panbanai Andri - எனக்கு எளியனுமான திருநறையூர் நம்பியைத்தவிர பாடல் செய்யேன், Paadal Seyyen - பாடமாட்டேன் |