திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1574 | பெரிய திருமொழி || (7-3–சினவில்) (திரு நறையூர் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சர்வ இந்த்ரியங்களுக்கும் தானே விஷயம் ஆனான் –பெரு விலையனான நீல மணி போலே இருக்கிற நிறத்தை உடையவனை – இந்நிறத்தைக் காட்டி என்னை அனந்யார்ஹன் ஆக்கிக் கொண்டவனுடைய நிறத்தை ஒழிய என்னுடைய வாக் இந்த்ரியம் ஆனது வேறு ஒன்றைப் பேசாது) 7 | பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற பாலையாகி இங்கே புகுந்து என்
கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் கொண்ட பின் மறையோர் மனம் தன்னுள்
விண்ணுளார் பெருமானை எம்மானை வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல்
வண்ணன் மா மணி வண்ணன் எம் அண்ணல் வண்ணமே அன்றி வாய் யுரையாதே –7-3-7 | பதவுரை Show / Hideபண்ணின், Pannin - இராகங்களுக்குள்ளே இன், In - இனிமையான மொழி, Mozhi - சொல்லையுடைய யாழ், Yaazh - வீணையினுடைய நரம்பில், Narambil - தந்திகளில் பெற்ற, Petra - உண்டான பாலை ஆகி, Paalai Aagi - பாலையென்கிற சிறந்த பண் போலே மிக இனியனாய்க் கொண்டு இங்கே புகுந்து, Inge Pugundhu - என்னெஞ்சில் வந்து புகுந்து என் கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான், En Kannum Nenjum Vaayum Idam Kondaaan - எனது அவயவங்களைத் தனக்கு இருப்பிடமாக அங்கீகரித்தான் கொண்டபின், Kondapin - அப்படி அங்கீகரித்தபின்பு,- மறையோர், Maraiyore - வைதிகர்களினுடைய மனம், Manam - மனத்தை தன் உள், Than Ula - தனது வாஸஸ்தானமாகவுடையவனும் விண்ணுளார் பெருமானை, Vinnulaar Perumaanai - நித்யஸூரிகளுக்குநாதனும் எம்மானை, Emmaanai - எனக்கு ஸ்வாமியும் வீங்கு நீர், Veengu Neer - நிரம்பிய நீரையுடையதாய் மகரம் திளைக்கும், Makarath Thilaikkum - மீன்கள் துள்ளிவிளையாடா நி்ன்றுள்ளதான கடல், Kadal - கடல் போன்ற வண்ணன், Vannaan - திருநிறத்தையுடையவனும் மா மணி வண்ணன், Maa Mani Vannaan - நீலமணி நிறத்தவனும் எம் அண்ணல், Em Annal - எமக்கு நாதனமான திருநறையூர் நம்பியீனுடைய வண்ணமே அன்றி, Vanname Andri - ஸ்வபாவத்தையே யல்லது (மற்றொன்றை) என் வாய் உரையாது, En Vaai Uraiyaadhu - என் வாய் சொல்லமாட்டாது. |