திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1575 | பெரிய திருமொழி || (7-3–சினவில்) (திரு நறையூர் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒன்றும் இன்றிக்கே இருக்கிற என் பக்கலில் தான் ஆசை உடையனாய்-என்னை சர்வாஸ்வாபஹாரம் பண்ணினவனை – நான் அநாதி காலம் பண்ணிப் போந்த ஆத்மாபஹாரத்தை-அரை ஷணத்திலே பண்ணினவனை இன்று-நினைவு இன்றிக்கே இருக்க காணப் பெற்றேன்) 8 | இனி எப்பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு இம்மையே அருள் பெற்றமையால் அடும்
துனியைத் தீர்த்து இன்பமே தருகின்றதோர் தோற்றத் தொன் நெறியை வையம் தொழப் படும்
முனியை வானவரால் வணங்கப் படும் முத்தினைப் பத்தர் தாம் நுகர்கின்றதோர்
கனியைக் காதல் செய்து என் உள்ளம் கொண்ட கள்வனை இன்று கண்டு கொண்டேனே –7-3-8 | பதவுரை Show / Hideஇம்மையே, Immaye - இஹலோகத்திலேயே (- (இன்று கண்டுகொண்டேன்-.)) அருள் பெற்றமையால், Arul Pettramaiyaal - எம்பெருமானுடைய திருவருளைப் பெற்றேனாதலால் இனி, Ini - இனிமேல் எமக்கு, Emakku - எம்மை எப் பாவம், Ep Paavam - எவ்விதமான பாவம் வந்து எய்தும், Vandu Eydhum - வந்து கிட்டக்கூடும் சொல்வீர், Solveer - சொல்லுங்கள்; அடும், Adum - ஆத்மஹாநியை விளைக்கிற துனியை, Thuniyai - கருமங்களை தீர்த்து, Theerthu - தவிர்த்து இன்பமே, Inbame - நித்யாநந்தத்தையே தருகின்றது, Tharugindrathu - தருகின்ற ஓர் தோற்றம் தொல் நெறியை, Or Thotram Thol Neriyai - ஒப்பற்ற விலக்ஷணமாய் அநாதியான உபாயமாயிருப்பவனும் வையம், Vaiyam - உலகத்தவர்களால் தொழப்படும், Thozhapadum - ஆச்ரயிக்கப்படுகின்றவனும் முனியை, Muniyai - (அவர்களுடைய நன்மைகளைச்) சிந்திப்பவனும் வானவரால் வணங்கப்படும், Vaanavaral Vanangapadum - நித்யஸூரிகளால் வணங்கப்படுகின்ற முத்தினை, Muththinai - முத்துப்போன்றவனை பத்தர் தாம், Pathar Thaam - பக்தர்களால் நுகர்கின்றது, Nugarkindrathu - உட்கொள்ளப்படுகின்ற ஓர் கனியை, Or Kaniyai - ஒரு பழம்போன்றவனும் காதல் செய்து, Kaadhal Seidhu - ஆசையுற்று என் உள்ளம் கொண்ட, En Ullam Konda - என் நெஞ்சைக் கொள்ளை கொண்ட கள்வனை, Kalvanai - கள்ளவனுமான பெருமானை |