திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1576 | பெரிய திருமொழி || (7-3–சினவில்) (திரு நறையூர் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவனை அல்லது போற்றி என்று என்னுடைய ஹிருதயம் ஆனது மங்களா சாசனம் பண்ணாது – பாழாளாகப் படை பொருதானுக்கு அல்லது என்னுடைய ஹிருதயமானது பல்லாண்டு பாடாது – நித்ய சூரிகள் பெரும் பேற்றைப் பெற்றேன் -சம்சாரியான நான் – பர தந்த்ரனாய் இருக்கையாலே பிரத்யுபகாரம் பண்ணலாவது காண்கிறிலேன் எத்தைச் செய்வேன் சொல்லி கோள்) 9 | என் செய்கேன் அடியேன் உரையீர் இதற்கென்றும் என் மனத்தே இருக்கும் புகழ்
தஞ்சை ஆளியைப் பொன் பெயரோன் நெஞ்சம் அன்று இடந்தவனைத்
தழலே புரை விஞ்ச வாள் அரக்கன் நகர் பாழ் படச் சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும்
பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை யன்றி என் மனம் போற்றி என்னாதே –7-3-9 | பதவுரை Show / Hideஅடியேன், Adiyen - பரதந்திரனான நான் இதற்கு என் செய்கேன், Idharku En Seigen - (அவன் பண்ணின மஹோபகாரமாகிய) இதற்கு என்ன கைம்மாறு செய்வேன்? உரையீர், Uraiyeer - சொல்லுங்கள்; என்றும், Endrum - எக்காலமும் என் மனத்தே, En Manatthae - என்னுள்ளத்திலேயே இருக்கும், Irukkum - குடியிருப்பதனாலாகிய புகழ், Pugazh - கீர்த்தியையுடையவனும் தஞ்சை ஆளியை, Thanjai Aaliyai - தஞ்சை மாமணிக்கோயிலை ஆள்பவனும் அன்று, Andru - நரஸிம்ஹாவதாரததில் பொன் பெயரோன், Pon Peyaron - இரணியனுடைய நெஞ்சம், Nenjam - மார்பை இடந்தவனை, Idanthavanai - பிளந்தொழித்தவனும் தழலே புரை, Thazhale Purai - நெருப்புப் போன்றவனாய் மின் செய், Min Sei - ஒளிவிடுகின்ற வாள், Vaal - வாட்படையை யுடையவனான அரக்கன், Arakkan - இராவணனுடைய நகர், Nagar - நகரமாகிய இலங்கை பாழ்பட, Paalpada - பாழாகும்படி சூழ், Sool - அந்நகரியைச் சூழ்ந்து கொண்டு அகழாயிருந்த கடல், Kadal - கடலை சிறை வைத்து, Sirai Vaiththu - அணைகட்டினவனும் இமையோர் தொழும், Imaiyor Thozhum - தேவர்களால் ஆச்ரயிக்கப்படுமவனும் பொன் செய் மால் வரையை, Pon Sei Maal Varaiyai - விரும்பத்தக்க பெரிய மலைபோன்றவனும் மணி குன்றினை அன்றி, Mani Kunrinai Andri - நீலமணிமயமான பர்வதம் போன்றவனுமான திருநறையூர் நம்பியைத் தவிர்த்து (மற்றொருவனை நோக்கி) என் மனம், En Manam - என் மனமானது போற்றி என்னாது, Pothri Ennaadhu - மங்களாசாஸநம் பண்ணமாட்டாது. |