திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1578 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1578பெரிய திருமொழி || (7-4–கண் சோர) (திருச்சேறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருத் துழாய் போலேயும் ஸ்ரீ கௌஸ்துபம் போலேயும் உம்முடைய ஸ்பர்சம் நமக்கு இனிதாய் இரா நின்றது – உம்முடைய தலையைக் கொடு வாரும் நம்முடைய காலை வைக்க என்ன இங்கு உமக்கு ஒழியாது வகுத்தவர்கள் காலுக்கு இடம் போரும் இத்தனை) 1
கண் சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல் போல் கூந்தலாளை மண் சேர முலை உண்ட மா மதலாய் வானவர் தம் கோவே என்று விண் சேரும் இளம் திங்கள் அகடு உரிஞ்சு மணி மாட மல்கு செல்வத் தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே –7-4-1
பதவுரை Show / Hide
கண் சோர, Kan Soora - கண்கள் சுழலமிட்டுத் தளரும்படியாகவும்
வெம் குருதி, Vem Kuruthi - வெவ்விய ரத்தமானது
வந்து இழிய, Vandhu Izhaiya - வெள்ளமிட்டுப் பெருகவுமாய்
மண் சேர, Man Cheera - மாண்டுபோம்படி
வெம் தழல் போல் கூந்தலாளை, Vem Thazhal Pol Koondhalalai - நெருப்புப்போல் செம்பட்ட மயிரையுடையளான பூதனையினுடைய
முலை, Mulai - (விஷங்கலந்த)முலையை
உண்ட, Unda - உறிஞ்சியுண்ட
மா மதலாய், Maa Mathalai - இளம்பிள்ளையே!
வானவர் தம் கோவே, Vaanavar Tham Kove - தேவாதி தேவனே!
என்று, Endru - என்று இவ்வண்ணமாகத் துதிசெய்து
விண் சேரும் இள திங்கள், Vin Serum Ila Thingal - ஆகாயத்தில் திரிகின்ற பாலசந்திரனுடைய
அகடு, Akadu - கீழ்வயிற்றை
உரிஞ்சு, Urinthu - அளாவுகின்ற
மணி மாடம், Mani Maadam - திருமாளிகைகள்
மல்கு, Malku - நிறைந்திருக்கப்பெற்ற
செல்வம், Selvam - வளம் மிக்க
தண், Than - குளிர்ந்த
சேறை, Serai - திருச்சேறையில் எழுந்தருளியிருக்கின்ற
எம்பெருமான், Emperumaan - ஸாரநாதப் பெருமாளுடைய
தாள், Thaal - திருவடிகளை
தொழுவார் காண்மின், Thozhuvaar Kaanmin - வணங்குமவர்கள் தாம்
என் தலை மேலார், En Thalai Meelaar - என் தலைமேல் வீற்றிருக்க வுரியார்.