திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1579 | பெரிய திருமொழி || (7-4–கண் சோர) (திருச்சேறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நித்ய வசந்தமாய் ஸ்ரமஹரமான பொழிலை உடைத்தாய் இருக்கிற ஸ்ரீ திருச் சேறையிலே ஸ்பர்தையாலே ஆகாசத்தைத் தள்ளுகிறாப் போலே இருக்கிற ஸ்ரீ கோயிலிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறவனுடைய திருவடிகளைத் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே – நிதித்யாசி தவ்ய-என்கிற விஷயத்துக்குஇடம் காண்கிறிலேன்) 2 | அம்புருவ வரி நெடுங்கண் அலர் மகளை வரை யகலத்து அமர்ந்து மல்லல்
கொம்பு உருவ விளங்கனி மேல் இளங்கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம்
வம்பலரும் தண்சோலை வண்சேறை வான் உந்து கோயில் மேய
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே –7-4-2 | பதவுரை Show / Hideஅம் புருவம், Am Puruvam - அழகிய புருவத்தையும் அரி நெடு கண், Ari Nedu Kan - செவ்வரி கருவரிபடர்ந்து நீண்ட கண்களையுமுடையளான அலர் மகளை, Alar Magalai - பெரிய பிராட்டியாரை வரை அகலத்து, Varai Akalathu - மாலைபோன்ற திருமார்பிலே அமர்ந்து, Amarnthu - பொருந்தவைத்துள்ளவனும் மல்லல் கொம்பு, Mallal Kombu - தழைத்த கிளைகளை வடிவமாகவுடைய விளாமரத்திலுள்ள கனி மேல், Kani Mel - பழத்தின் மேலே இள கன்று கொண்டு, Ila Kandu Kondu - (அஸுரவடிவாய் வந்த தொரு) சிறு கன்றை(த் தடியாக)க் கொண்டு எறிந்த, Erintha - வீசியெறிந்த கூத்தர் ஆம், Koothar Aam - நடையழகுடையவனும், வம்பு அலரும் தண் சோலை, Vambu Alarum Than Solai - பரிமளம் வீசுகின்ற குளிர்ந்த சோலைகளையுடைய வண் சேறை, Van Serai - அழகிய திருச்சேறையிலே வான் உந்து கோயில் மேய, Vaan Unthu Koyil Meya - ஆகாசத்ததையளாவுகின்ற ஸந்நிதியில் நித்யவாஸம் செய்பவனுமான எம்பெருமான், Emperumaan - ஸாரநாதப்பெருமாளுடைய தாள், Thaal - திருவடிகளை தொழுவார், Thozhuvar - ஸேவிப்பவர்கள் எப்பொழுதும், Eppozhudum - எந்நாளும் எம் மனத்தே இருக்கின்றார், Em Manathae Irukkindraar - என்னெஞ்சிலேயே வாஸஞ்செய்கிறார்கள் |