திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1580 | பெரிய திருமொழி || (7-4–கண் சோர) (திருச்சேறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருச் சேறையிலே எழுந்து அருளி இருக்கிறவன் திருவடிகளை ஏத்தி –ஆஸ்ரயிக்கிற பாக்யாதிகரே – சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி ஆஸ்ரயிக்கிற நித்ய சூரிகளில் சம்ருத்தர் ஆகிறார் – அங்கே இருந்து ஆஸ்ரயிக்கிறவர்கள் இங்கே இருந்தபடியே ஆஸ்ரயிக்கிறவர்களோடே ஒவ்வார் இறே) 3 | மீதோடி வாள் எயிறு மின்னிலக முன் விலகும் உருவினாளைக்
காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த கைத்தலத்தா என்று நின்று
தாதோடு வண்டலம்பும் தண் சேறை எம்பெருமான் தாளை ஏத்திப்
போதொடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றாரே –7-4-3 | பதவுரை Show / Hideவாள் எயிறு, Vaal Eiyiru - ஒளி பொருந்திய கோரப்பல்லானது மீது ஓடி, Meethu Odi - மேல் முகமாக வளர்ந்து மின் இலக, Min Ilaka - மின்னல்போல் விளங்க முன் விலகும் உருவினாளை, Mun Vilakum Uruvinai - முன்னே வந்து நின்ற உருவத்தை யுடையளான சூர்ப்பணகை யினுடைய காதோடு, Kaadodu - காதையும் கொடி மூக்கு, Kodi Mooku - கொடி மூக்கையும் அன்று, Andru - அப்போது உடன், Udan - உடனே அறுத்த, Arutha - அறுத்துவிட்ட கைத்தலத்தா, Kaithalaththaa - திருக்கையை யுடையவனே! என்று நின்று, Endru Nindru - என்று நிலைநின்று,- வண்டு, Vandu - வண்டுகளானவை தாதோடு, Thadodhu - பூந்தாதுகளிலே அலம்பும், Alambum - ஆரவாரம் செய்யப்பெற்ற தண் சேறை, Than Serai - குளிர்ந்த திருச்சேறையிலுள்ள எம்பெருமான், Emperumaan - ஸாரநாதப்பெருமாளுடைய தாளை, Thaalai - திருவடிகளை ஏத்தி, Aethi - துதித்து போதோடு, Pothodu - புஷ்பங்களையும் புனல், Punal - தீர்த்தத்தையும் தூவும், Thuvum - ஸமர்ப்பிக்கிற புண்ணியர், Punniyar - பாக்கியசாலிகள் விண்ணவரில், Vinnavaril - நித்யஸூரிகளிற் காட்டிலும் பொலிகின்றார், Polikindraar - மேம்பாடுடையார். |