திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1582 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1582பெரிய திருமொழி || (7-4–கண் சோர) (திருச்சேறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரமஹரமாய் இருக்கிற ஸ்ரீ திருச் சேறையிலே நாயனார் உடைய திருவடிகளை நாள் தோறும் போக ரூபமாக அனுசந்திப்பாருக்கு –என்னுடைய ஹிருதயமானது தேனூறி எப்பொழுதும் இனிதாக நின்றது இது வெருமனேயோ) 5
வந்திக்கும் மற்றவர்க்கும் மாசுடம்பில் வல்லமணர் தமக்கும் அல்லேன் முந்திச் சென்று அரி யுருவாய் இரணியனை முரண் அழித்த முதல்வருக்கு அல்லால் சந்தப்பூ மலர்ச் சோலைத் தண் சேறை எம்பெருமான் தாளை நாளும் சிந்திப்பார்க்கு என்னுள்ளம் தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே –7-4-5
பதவுரை Show / Hide
அரி உரு ஆய், Ari Uru Aay - நரஸிம்ஹரூபியாய்
முந்தி சென்று, Mundhi Sendru - முந்துற வெளிப்பட்டு
இரணியன் முரணை, Iraaniyan Muranai - இரணியாசுரனுடைய வலியை
அழித்த, Azhitha - பாழ்படுத்தின
முதல்வற்கு அல்லால், Muthalvarkku Allaal - ஜகத்காரணபூதனான எம்பெருமானுக்கல்லது,
மாசு உடம்பின், Maasu Udambin - அழுக்கேறின உடம்பையுடையராய்
வல், Val - வலிந்து வாது செய்பவர்களான
அமணர் தமக்கும், Amanar Thamakum - ஜைநர்கட்கும்
வந்திக்கும் மற்றவர்க்கும், Vandhikkum Matravarkkum - ‘வந்தே’ என்று சொல்லிக் கொண்டு திரிகிற பௌத்தர்கட்கும்
அல்லேன், Alleen - கூட்டுப்படக் கடவேனல்லேன்;
சந்தம் பூமலர், Sandham Poomalai - சந்தநப் புஷ்பங்களையுடைய
சோலை, Solai - சோலைகளையுடைத்தான
தண் சேறை, Than Serai - குளிர்ந்த திருச்சேறையிலுள்ள
எம்பெருமான், Emperumaan - ஸாரநாதப் பெருமாளுடைய
தாளை, Thaalai - திருவடிகளை
நாளும், Naalum - நாள்தோறும்
சிந்திப்பார்க்கு, Sindhippaarkku - தியானம் செய்யும் பாகவதர்திறத்தில்
என் உள்ளம், En Ullam - என் மனமானது
தேன் ஊறி, Then Oori - அமுதம் சுரக்கப்பெற்று
எப்பொழுதும், Eppozhudum - இடைவிடாது
தித்திக்கும், Thithikkum - திக்திக்கின்றது.