திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1583 | பெரிய திருமொழி || (7-4–கண் சோர) (திருச்சேறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ வண் சேறை எம்பெருமான் அடியாரைக் கண்ட மாத்ரத்திலே –கண்டி கோளே என்னுடைய நெஞ்சும் கண் இணையும் களிக்கிற படி-ஆன பின்பு அத்யவசிக்கையில் ஒரு குறை உண்டோ) 6 | பண்டு ஏனமாய் யுலகை யன்று இடந்த பண்பாளா என்று நின்று
தொண்டானேன் திருவடியே துணை அல்லால் துணை இலேன் சொல்லுகின்றேன்
வண்டு ஏந்து மலர்ப் புறவில் வண் சேறை எம்பெருமான் அடியார் தம்மைக்
கண்டேனுக்கு இதுகாணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே –7-4-6 | பதவுரை Show / Hideபண்டு அன்று, Pandhu Andru - முன்பொருகால் ஏனம் ஆய், Enam Aay - மஹாவராஹரூபியாய் உலகை, Ulagai - பூமியை இடந்தா, Idandha - கோட்டாற் குத்தியேடுத்துவந்த பண்பாளா, Panpaala - குணசாலியே! என்று நின்று, Endru Nindru - என்று சொல்லி நிலைநின்று தொண்டு ஆனேன், Thondu Aaneen - (உனது திருவடிகட்கு) அடிமை யானேன்; திரு அடியே துணை அல்லால், Thiru Adiye Thunai Allaal - (உனது) திருவடிகளே துணை யாவதன்றி துணை இலேன், Thunai Ileen - வேறு துணையுடையேனல்லேன்; சொல்லுகின்றேன், Solligindren - இ சத்தியம்; வண்டு ஏந்தும், Vandu Aenthum - வண்டுகளைத் தரிக்கின்ற மலர், Malar - பூக்களையுடைய புறவில், Puravil - தோப்புகளை யுடைத்தான வண் சேறை, Van Serai - அழகிய திருச்சேறையிலுள்ள எம்பெருமான், Emperumaan - ஸாரநாதப் பெருமாளுடைய அடியார் தம்மை, Adiyaar Thammai - பக்தர்களை கண்டேனுக்கு என் நெஞ்சும், Kandeenukku En Nenjum - ஸேவிக்கப்பெற்ற எனது மனமும் கண் இணையும், Kan Inaiyum - இரண்டு கண்களும் களிக்கும் ஆறு, Kalikkum Aaru - களிக்கும் விதம் இது காணீர், Idhu Kanneer - இதோ பாருங்கள். |