திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1585 | பெரிய திருமொழி || (7-4–கண் சோர) (திருச்சேறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பாகவதர்களை நெஞ்சாலே நினைக்க மிருத்யுவால் வரும் பயம் போம் – பாபங்கள் உடைய நலிவால் வரும் பயத்துக்கும் அஞ்ச வேண்டா என்கிறது) 8 | உண்ணாது வெங்கூற்றம் ஓவாத பாவங்கள் சேரா மேலை
விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும் மென் தளிர் போல் அடியினானைப்
பண்ணாரா வண்டு இயம்பும் பைம் பொழில் சூழ் தண் சேறை யம்மான் தன்னைக்
கண்ணாரக் கண்டு உருகி கையார தொழுவாரைக் கருதும் காலே –7-4-8 | பதவுரை Show / Hideமேலை விண்ணோரும், Melaivinnoram - மேலுலகத்தவர்களான நித்ய ஸூரிகளும் மண்ணோரும், Mannoram - இம் மண்ணுலகத்திலுள்ளாரும் வந்து இறைஞ்சும், Vandhu Irainchum - கிட்டி வணங்கும்படியான மென் தளிர் போல் அடியினானை, Men Thalir Pol Adiyinanae - மெல்லிய தளிர்போன்ற (ஸூகுமாரமான) திருவடிகளை யுடையவனும் பண் ஆர வண்டு இயம்பும் பை பொழில் சூழ் தண் சேறை அம்மான் தன்னை, Pan Aara Vandu Iyampum Pai Pozhil Soozh Than Saerai Amman Thannai - பண்கள் நிரம்ப வண்டுகள் பாடப்பெற்ற சோலைகளாற் சூழப்பட்ட குளிர்ந்த திருச்சேறையில் எழுந்தருளியிருப்பவனுமான ஸாரநாதப் பெருமானை கண் ஆர கண்டு, Kan Aara Kandu - கண்கள் நிறையும்படி ஸேவித்து உருகி, Urugi - மனம் நெகிழ்ந்து கை ஆர, Kai Aara - கைகளின் ஆசை தீரும்படி தொழுவாரை, Thozhuvaarai - தொழாநின்ற பாகவதர்களை கருதுங்கால், Karuthungkaal - சிந்தைசெய்த மாத்திரத்தில், வெம், Vem - கொடிதான கூற்றம், Kootram - யமதேவதையானது உண்ணாது –, Unnaadhu - நெருங்கமாட்டாது; ஓவாத பாவங்கள், Ovaadha Paavangal - இடைவிடாத பாவங்களானவை சேரா, Sera - கிட்டமாட்டா. |