திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1586 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1586பெரிய திருமொழி || (7-4–கண் சோர) (திருச்சேறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (எனக்கு இது தான் உண்டான படி எங்கனே என்கிறார்) 9
கள்ளத்தேன் பொய்யகத்தேன் ஆதலால் போதருகால் கவலை என்னும் வெள்ளத்தேற்கு என் கொலோ விளை வயலுள் கரு நீலம் களைஞர் தாளால் தள்ளத்தேன் மண நாறும் தண் சேறை எம்பெருமான் தாளை நாளும் உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர் என்னுள்ளம் உருகுமாறே –7-4-9
பதவுரை Show / Hide
விளை வயலுள், Vilai Vayalul - பயிர்தழைத்த கழனிகளில் (முளைத்திருக்கிற)
கரு நீலம், Karun Neelam - கருநெய்தலை,
களைஞர், Kalaignar - களைபிடுங்குகிற உழவர்
தாளால், Thaalal - (தங்கள்) கால்களாலே
தள்ள, Thalla - ஒதுக்கித்தள்ள,
தேன், Then - (அதில்நின்று மொழுகின) தேனினுடைய
மணம் நாறும், Manam Naarum - பரிமளம் வீசப்பெற்ற
தண் சேறை, Than Serai - திருச்சேறையில் எழுந்தருளியிருக்கின்ற
எம்பெருமான், Emperumaan - ஸாரநாதப் பெருமாளுடைய
தாளை, Thaalai - திருவடிகளை
நாளும், Naalum - நாள்தோறும்
உள்ளத்தே, Ullatthae - நெஞ்சிலே
வைப்பாருக்கு, Vaipparukku - வைத்துச் சிந்தைசெய்கின்ற பாகவதர் விஷயத்தில்
என் உள்ளம் உருகும் ஆறு காணீர், En Ullam Urugum Aaru Kanneer - என்மனம் நீர்ப்பண்டமாக உருகும் விதத்தைப் பாருங்கோள்;
கள்ளத்தேன் பொய் அகத்தேன் ஆதாலால், Kallatthen Poi Agatthen Aathaalal - ஆத்மாபஹாரக்கள்வனும் வஞ்சநெஞ்சையுடையனுமாய் அடியேனிருப்பதால்
போதருகால், Potharugal - ஒரு நொடிப் பொழுதும் இடைவிடாதே
கவரை என்னும் வெள்ளத் தேற்கு, Kavarai Ennum Vellat Therku - துக்கமாகிற பெருங்கடலில் அழுந்திக்கிடந்த எனக்கு
இது என் கொல், Idhu En Kol - இப்படிப்பட்ட பேறு எங்ஙனே உண்டாயிற்றோ?