திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1588 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1588பெரிய திருமொழி || (7-5–தந்தை காலில்) (திருவழுந்தூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிராப்ய பூதனான அவன் வந்து நிற்கையாலே நமக்கு பிராப்ய பூமி தான் போலே இருந்தது என்று ஆதர அதிசயம் தோற்ற சொல்லுகிறது) 1
தந்தை காலில் பெரு விலங்கு தாள விழ நல்லிருள் கண் வந்த எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர் போலும் முந்தி வானம் மழை பொழியும் மூவா வுருவில் மறையாளர் அந்தி மூன்று அனல் ஓம்பும் அணியார் வீதி அழுந்தூரே –7-5-1
பதவுரை Show / Hide
வானம், Vaanam - மேகமானது
முந்தி, Mundhi - (யாகஞ் செய்வதற்கு) முன்னமே
மழை பொழிய, Mazhai Pozhiya - மழை பெய்யப்பெற்றதும்,
மூவா உருவின், Moova Uruvin - கிழத்தனமற்ற உருவத்தை யுடையரான
மறையாளர், Maraiyalar - பிராமணர்கள்
அந்திமூன்றும், Andhimoonrum - முச்சந்தியும்
அனல் ஓம்பும், Anal Oombum - அக்நிஹோத்ரம் செய்யப்பெற்றதுமான
அணி ஆர் வீதி, Ani Ar Veethi - அழகுமிக்க திருவீதிகளை யுடைய
அழுந்தூர், Azhundhoor - திருவழுந்தூரென்னுந் திருப்பதியானது,-
தந்தை, Thandhai - தகப்பனாராகிய வஸுதேவருடைய
காலில், Kaali - காலிலே (பூட்டப்பட்டிருந்த)
பெரு விலங்கு தாள் அவிழ, Peru Vilangu Thaal Avizha - பெரிய விலங்குப்பூட்டு இற்றுவிழும்படியாக
நள் இருள் கண், Nal Irul Kan - நடுநிசியிலே
வந்த, Vandha - திருவவதரித்த
எந்தை பெருமானார், Endhai Perumaanar - எம்பெருமான்
மருவி நின்ற, Maruvi Nindra - நித்யவாஸஞ் செய்யப்பெற்ற
ஊர்போலும், Oorpolum - திவ்யதேசமாகும்.