திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1595 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1595பெரிய திருமொழி || (7-5–தந்தை காலில்) (திருவழுந்தூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இன்ன பரிமாற்றம் பெற்றிலோம் -என்கிற அத்ருப்தி நெஞ்சில் கிடவாதபடி யாக வாய்த்து நெஞ்சிலே குறைவறப் புகுந்து நின்றபடி) 8
வஞ்சி மருங்கிலிடை நோவ மணந்து நின்ற கனவகத்து என் நெஞ்சு நிறையக் கை கூப்பி நின்றார் நின்ற ஊர் போலும் பஞ்சியன்ன மெல்லடி நற்பாவை மார்கள் ஆடகத்தின் அஞ்சிலம்பின் ஆர்ப்போவா அணியார் வீதி அழுந்தூரே –7-5-8
பதவுரை Show / Hide
பஞ்சி அன்ன மெல் அடி, Panjai Anna Mel Adi - பஞ்சுபோன்ற மிருதுவான பாதங்களையுடைய (- (அணி ஆர் வீதி அழுந்தூர்-))
நல் பாவைமார்கள், Nal Paavaimargal - நல்ல ஸ்திரீகளினுடைய
ஆடகத்தின் அம் சிலம்பின், Aadakathin Am Silampin - பொன்மயமான அழகிய சிலம்புகளினின்று முண்டான
ஆர்ப்பு, Aarppu - ஆரவாரமானது
ஓவா, Ovaa - இடைவிடாதிருக்கிற
வஞ்சி, Vanjci - வஞ்சிக்கொடிபோன்ற
மருங்குல் இடை, Marungul Idai - இடுப்பானது
நோவ, Nova - நோகும்படியாக
மணந்து நின்ற, Manandhu Nindra - ஸம்ச்சேஷித்து நின்ற
கனவகத்து, Kanavakathu - கனவிலே
என் நெஞ்சு நிறையா, En Nenju Niraiyaa - எனது நெஞ்சு நிறையுமாறு
கை கூப்பி, Kai Koopi - நான அஞ்ஜலி செய்யப்பெற்று
நின்றார், Nindraar - நின்று கொண்டிருந்தவர்
நின்ற, Nindra - நித்யவாஸம் பண்ணுகிற
ஊர் போலும், Oor Polum - திவ்யதேசமாகும்.