திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1599 | பெரிய திருமொழி || (7-6–சிங்கமதாய்) (திருவழுந்தூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அசாதாரண பரிகரத்துக்கு ஐயோ என்று கிருபையைப் பண்ணி ஸ்ரீ திரு வழுந்தூரிலே வந்து நிற்கிற அயர்வறும் அமரர்கள் அதிபதியை-நான் கண்ணாலே காணப் பெற்று ஷோபம் அடையத் தீர்ந்து களிக்கப் பெற்றேன்) 2 | கோவானார் மடியக் கொலையார் மழுக் கொண்டு அருளும்
மூவா வானவனை முழு நீர் வண்ணனை யடியார்க்கு
ஆவா வென்று இரங்கித் தென் அழுந்தையில் மன்னி நின்ற
தேவாதி தேவனை யான் கண்டு கொண்டு திளைத்தேனே –7-6-2 | பதவுரை Show / Hideகோ ஆனார், Ko Aanaar - க்ஷத்ரியர்களென்று பேர் பெற்றவரடங்கலும் (- (தென் அழுந்தையில் மன்னி நின்ற -;)) மடிய, Madiya - மடிந்தொழியும்படி கொலை ஆர் மழு, Kolai Aar Mazhu - கொலைத்தொழில் வல்ல மழுப்படையை கொண்டருளும், Kondarulum - (திருக்கையில்) ஏந்தியுள்ளவனும் மூவா வானவனை, Moova Vaanavanai - கிழத்தனம் முதலிய விகாரங்களில்லாத தேவாதி தேவனும் முழுநீர் வண்ணனை, Muzhunir Vannnai - கடல்போன்ற திருநிறத்தை யுடையவனும் அடியார்க்கு, Adiyarkku - அடியார் விஷயத்திலே ஆ ஆ என்று இரங்கி, Aa Aa Endru Irangi - ஐயோவென்று கிருபை பண்ணி தேவாதி தேவனை, Devaadhi Devanai - தேவர்கட்கும் சிறந்த தேவனுமான பெருமானை யான் கண்டு கொண்டு, Yaan Kandu Kondo - அடியேன் ஸேவித்து திளைத்தேன், Thilaiththen - களிக்கப்பெற்றென். |