திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1601 | பெரிய திருமொழி || (7-6–சிங்கமதாய்) (திருவழுந்தூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அன்று பசுவின் நெய்யை அமர்ந்து அமுது செய்த ஸ்ரீ திரு வழுந்தூர் நின்றானை- ஸ்ரீ திருவாய்ப்பாடியிலே நின்ற படி யாய்த்து இங்கு நிற்பது – கண்ணாலே காணப் பெற்று அபூர்ணனான நான் பூர்ணனாகப் பெற்றேன்) 4 | குன்றால் மாரி தடுத்தவனைக் குல வேழம் அன்று
பொன்றாமை அதனுக்கு அருள் செய்த போர் ஏற்றை
அன்று ஆவின் நறு நெய் அமர்ந்து உண்ண வணி யழுந்தூர்
நின்றானை யடியேன் கண்டு கொண்டு நிறைந்தேனே –7-6-4 | பதவுரை Show / Hideகுன்றால், Kundraal - கோவர்த்தந கிரியைக்கொண்டு (- (அடியேன் கண்டுகொண்ட-;)) மாரி, Maari - பெருமழையை தடுத்தவனை, Thaduthavanai - தடை செய்தவனும் குலம் வேழம், Kulam Vezham - சிறந்தகுலத்துப் பிறந்த கஜேந்திராழ்வான் பொன்றாமை, Pondraamai - (முதலைவாய்ப்பட்டு) முடிந்து போகாமல் அன்று, Andru - அக்காலத்து அதனுக்கு அருள்செய்த, Adhanukku Arulcheytha - அதற்கு அருள்புரிந்தவனும் போர் ஏற்றை, Por Aetrai - போர் செய்யவல்ல காளை போன்றவனும் ஆவின் நறு நெய், Aavin Naru Ney - பசுவின மண நெய்யை அமர்ந்து உண்ண, Amarnthu Unna - விரும்பியமுதுசெய்ய அன்று, Andru - அன்றேபிடித்து அணி அழுந்தூர் நின்றானை, Ani Azhundoor Nindraanai - அழகிய திருவழுந்தூரில் நிற்பவனமான பெருமானை நிறைந்தேன், Niraindhen - குறையற்றவனானேன். |