திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1602 | பெரிய திருமொழி || (7-6–சிங்கமதாய்) (திருவழுந்தூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரமஹரமான வடிவை உடையனாய்க் கொண்டு தாபத்ரயம் போம் படி நின்றவனை தாபத் த்ரயத்தாலும் தப்தனாய் இருக்கிற நான் கண்டு என்னுடைய தாபத்ரயங்கள் தீரப் பெற்றேன்) 5 | கஞ்சனைக் காய்ந்தானைக் கண்ண மங்கையுள் நின்றானை
வஞ்சனப் பேய் முலை யூடு உயிர் வாய் மடுத்து உண்டானைச்
செஞ்சொல் நான் மறையோர் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அஞ்சனக் குன்றன் தன்னை அடியேன் கண்டு கொண்டேனே –7-6-5 | பதவுரை Show / Hideகஞ்சனை, Kanjanai - கம்ஸனை (- (தென் அழுந்தையில் மன்னி நின்ற -;) (அடியேன் கண்டுகொண்டேன்-)) காய்ந்தானை, Kaindhaanai - சீறித் தொலைத்தவனும் கண்ண மங்கையுள் நின்றானை, Kanna Mangaiyul Nindraanai - திருக்கணணமங்கையில் நிற்பவனும் வஞ்சனம், Vanjanam - வஞ்சனையையுடையளான பேய், Pei - பேய்ச்சியினுடைய முலையூடு, Mulaiyoodhu - முலைவழியே வாய் மடுத்து, Vaai Maduthu - வாய் வைத்து உயிர், Uyir - (அவளது) பிராணனை உண்டானை, Undhaanai - அபஹரித்தவனும், செம் சொல் நால் மறையோர், Sem Sol Naal Maraiyore - அழகிய சொற்கள் நிறைந்த நான்குவேதங்களையும் வல்ல வைதிகர்கள் வாழ்கிற அஞ்சனம் குன்றம் தன்னை, Anjanam Kuntram Thannai - மைமலைபோன்ற வடிவழகையுடையவனுமான பெருமானை |