திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1606 | பெரிய திருமொழி || (7-6–சிங்கமதாய்) (திருவழுந்தூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திரு அழுந்தூரிலே நித்ய வாஸம் பண்ணுகிற – கார் காலத்திலேயே மேகம் போலே ஸ்ரமஹரமான வடிவு அழகை உடையவனை – கண்கள் குளிரக் காணப் பெற்று ஹ்ருஷ்டன் ஆனேன்) 9 | பேரானைக் குடந்தை பெருமானை இலங்கொளி சேர்
வாரார் வனமுலையாள் மலர்மங்கை நாயகனை
ஆராவின்னமுதைத் தென் அழுந்தையில் மன்னி நின்ற
காரர் கரு முகிலைக் கண்டு கொண்டு களித்தேனே –7-6-9 | பதவுரை Show / Hideபேரானை, Peraanai - திருப்பேர்நகரில் பள்ளி கொண்டிருப்பவனும (- (தென் அழுந்தையில் மன்னி நின்ற-) (கண்டுகொண்டு களித்தேன்-.)) குடந்தை பெருமானை, Kudandhai Perumaanai - திருக்குடந்தையில் தன் பெருமைகளெல்லாந் தோற்ற சயனித் திருப்பவனும் இலங்கு ஒளி சேர், Ilangu Oli Ser - விளங்குகின்ற காந்தியோடு கூடின வார் ஆர், Vaar Aar - கச்சுநிறைந்த வனம் முலையாள், Vanam Mulaiyal - அழகிய முலைகளையுடைளான மலர்மங்கை, Malar Mangai - பெரிய பிராட்டியார்க்கு நாயகனை, Nayakanai - வல்லபனும் ஆரா இன் அமுதை, Aara In Amuthai - எவ்வளவு அநுபவித்தாலும் த்ருப்திபெறமுடியாத இனிய அமுதம் போன்றவனும் கார் ஆர் கரு முகிலை, Kaar Ar Karu Mukilai - மழை காலத்துக் காளமேகம் போன்றவனுமான பெருமானை |