திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1608 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1608பெரிய திருமொழி || (7-7–திருவுக்கும்) (திருவழுந்தூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ரஷகனான உன்னில் காட்டிலும் பாதக வர்க்கம் அணித்தாய் நின்று நலியா நின்றன – கர்ம வச்யன் ஆகையாலே கர்ம க்ருதங்கள் சேர்ந்தே இருக்கும் நீ அவசரம் பார்த்து புகுந்தாய் -இவை சஹஜங்கள்- உண்ணிலாய -என்னுமா போலே ஒருவர் இருவர் இன்றிக்கே சேதன சமாதியால் நலியா நின்றுள்ள ஐந்து இந்த்ரியங்கள் என் பக்கல் வந்து புகுந்து என்னை நெருக்கி ஒரு ஷணமும் கால் வாங்குகிறவன வில்லை- என்னுடைய விஷயத்தைக் காட்டு -என்னுடைய விஷயத்தைக் காட்டு என்று இவை தனித் தனியே அலைத்து நெருக்க-அவற்றுக்கு அஞ்சி வந்து சர்வ ஸ்வாமியான உன் திருவடிகளிலே சரண ரஷணத்தில் அதிகரித்த உனக்கு அத்தை முடிய நடத்த வேண்டாவோ) 1
திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா உருவச் செஞ்சுடராழி வல்லானே உலகுண்ட ஒருவா திரு மார்பா ஒருவருக்கு ஆற்றி உய்யும் வகை அன்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது அருவித் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே –7-7-1
பதவுரை Show / Hide
திருவுக்கும திரு ஆகிய செல்வா, Thiruvukkum Thiru Aagiya Selva - ஸ்ரீ மஹாலக்ஷிமிக்கும் லக்ஷ்மீகரனான செல்வனே!
தெய்வத்துக்கு அரசே, Deivathukku Arase - நித்யஸூரிகட்குத் தலைவனே!
செய்ய கண்ணா, Seyya Kanna - புண்டரீகாக்ஷனே!
உருவம் செம் சுடர் ஆழி வல்லானே, Uruvam Sem Sudar Azhivallane - அழகிய வழிவை யுடைத்தாய் செவ்விய சுடர்மயனான திருவாழியை (ப்ரயோகித்தலில்) ஸமர்த்தனே!
உலகு உண்ட ஒருவா, Ulaku Unda Oruva - (பிரளயத்தில்) உலகங்களை யமுதுசெய்த அத்விதீயனே!
திரு மார்பா, Thiru Marbaa - பிராட்டியைத் திருமார்பிலுடையவனே!
அழுந்தூர், Azhundhoor - திருவழுந்தூரில்
மேல் திசை நின்ற அம்மானே, Mel Thisai Nindra Ammane - மேலைத்திசையில் எழுந்தருளியிருக்கும் பெருமானே!,
ஒருவற்கு ஆற்றி உய்யும் வகை அன்று, Oruvarkku Aatru Uyyum Vagai Andru - ஒரு இந்திரியத்துக்குத் தப்பிப் பிழைக்கும் வழி இல்லை;
ஆல், Aal - அந்தோ! ;
ஐவர், Aivar - ஐந்து இந்திரியங்கள்
உடன் நின்று, Udan Nindru - நெருங்கியிருந்து
என்னுள் புகுந்து, Ennul Pugundhu - என் பக்கலிலே வந்து புகுந்து
ஒழியாது, Ozhiyadhu - ஓயாமல் (எப்போதும்)
அருவி, Aruvi - அலைத்து
தின்றிட, Thinridha - நெருக்க
அஞ்சி, Anji - (அதற்கு) அஞ்சி
நின், Nin - உன்னைச் சரணம்
அடைந்தேன், Adaindhen - புகுந்தேன்