திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1609 | பெரிய திருமொழி || (7-7–திருவுக்கும்) (திருவழுந்தூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வேறேயும் சில ரஷகரும் யுண்டாய் -அவர்கள் ரஷிக்கிறார்கள் என்று உனக்கு ஆறி இருக்க ஒண்ணாது கிடாய் – அநந்ய கதியான நான் உன் திருவடிகளை ஒழிய வேறு ஒரு புகலை யுடையேன் அல்லேன் – அநந்ய கதிகளை நோக்குகைக்கு அன்றோ தேவரீர் இங்கே வந்து நிற்கிறது) 2 | பந்தார் மெல்விரலி நல் வளைத் தோளி பாவை பூ மகள் தன்னொடும் யுடனே
வந்தாய் என் மனத்தே மன்னி நின்றாய் மால் வண்ணா மழை போல் ஒளி வண்ணா
சந்தோகா பௌழியா தைத்ரியா சாமவேதனே நெடுமாலே
அந்தோ நின்னடி யன்றி மற்றறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே –7-7-2 | பதவுரை Show / Hideபந்து ஆர் மெல் விரல், Pandhu Aar Mel Viral - பந்து பொருந்திய மெல்லிய கைவரல்களை யுடையளும் (- (அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே!- ;)) நல் வளை தோளி, Nal Valai Thoali - நல்ல வளைகளையணிந்த தோள்களை யுடையளும் பாவை, Paavai - பதுமை போன்றவளுமான பூ மகள் தன்னோடும் உடனே வந்தாய், Poo Magal Thannodum Udaney Vandhai - பெரிய பிராட்டியாரோடு கூட எழுந்தருளினவனாய் என் மனத்தே மன்னி நின்றாய், En Manaththae Manni Nindraai - என் நெஞ்சிலே பொருந்தி யெழுந்தருளியிருக்கு மவனே! மால் வண்ணா, Maal Vanna - கருத்த நிறத்தை யுடையவனே! மழை போல் ஒளி வண்ணா, Mazhai Pol Oli Vanna - மேகம் போன்று குளிர்ந்து அழகிய வடிவையுடையவனே! சந்தோகா, Santhokaa - சாந்தோக்ய உபநிஷத்தை உணர்ந்தவனே! பௌழியா, Pauzhiyah - கௌஷீதகீப்ராஹ்மண முணர்ந்தவனே தைத்திரியா, Thaitthiriyah - தைத்திரீய உபநிஷத்தை உணர்ந்தவனே! சாம வேதியனே, Saama Vedhiyaney - ஸாமவேத முணர்ந்தவனே! நெடுமாலே, Nedumaale - ஸர்வஸ்மாத்பரனே! நின் அடி அன்றி, Nin Adi Andri - உனது திருவடிகளையன்றி மற்று அறியேன், Mattru Ariyen - வேறொரு புகல் அறிகிறேனில்லை. |