திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1610 | பெரிய திருமொழி || (7-7–திருவுக்கும்) (திருவழுந்தூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நிருபாதிக பந்துவே உன் திருவடிகளை ஒழிய வேறு ஒரு புகல் யுடையேன் அல்லேன் – நிருபாதிக பந்தம் தோற்ற வந்து நிற்கிறவனே) 3 | நெய்யார் ஆழியும் சங்கமும் ஏந்தும் நீண்ட தோளுடையாய் அடியேனைச்
செய்யாத வுலகத்திடைச் செய்தாய் சிறுமைக்கும் பெருமைக்குமுள் புகுந்து
பொய்யால் ஐவர் என் மெய் குடி ஏறிப் போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின்னடைந்தேன்
ஐயா நின்னடி யன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –7-7-3 | பதவுரை Show / Hideஐயா, Aiya - ஸ்வாமீ! (- (அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!- ;) (நின் அடைந்தேன்-;) (நின் அடி அன்றி மற்று அறியேன்-)) நெய் ஆர் ஆழியும், Ney Aar Aazhiym - நெய்யிட்டிருக்கிற சக்கரத்தையும் சங்கமும், Sangamum - ஸ்ரீபாஞ்சஜந்யத்தையும் ஏந்தும், Aendhum - தரித்திருக்கின்ற நீண்ட தோள் உடையாய், Neenda Thoal Udaiyaai - பெரிய திருக்கைகளை யுடையவனே! அடியேனை, Adiyenai - உனக்கே உரியவனான என்திறத்தில் உலகத்திடை, Ulagaththidai - இவ்வுலகத்திலே செய்யாத செய்தாய், Seyyadha Seithai - செய்யத்தகாதவற்றை யெல்லாம் செய்தாய்; ஐவர், Aivar - பஞ்சேந்திரியங்கள் பொய்யால், Poyyaal - க்ருத்ரிமத்தோடு கூடி சிறுமைக்கும் பெருமைக்கும் உள் புகுந்து, Sirumaikkum Perumaikkum Ula Pugundhu - சிற்றின்ப வாழ்வுக்கும் பேரின்ப வாழ்வுக்கும் பொதுவாக என்னுள்ளே புகுந்து என் மெய் குடி ஏறி, En Mey Kudi Eri - என் சரீரத்திலே குடியேறியிருக்க போற்றி வாழ்வதற்கு அஞ்சி, Pothri Vazhvadarku Anji - அவற்றை த்ரப்தியடையச் செய்து வாழ்வதற்குப் பயப்பட்டு. |