திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1611 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1611பெரிய திருமொழி || (7-7–திருவுக்கும்) (திருவழுந்தூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒருவனுக்கு உள்ளீடாய் நின்று ரஷிக்கை அன்றிக்கே வராஹ கல்பத்தின் யுடைய ஆதியிலே ஸ்ரீ மகா வராஹமாய் வந்து அவதரித்து கண்ணுக்கு இலக்கை நின்று நோக்கினவனே- அது தன்னை பழம் கதை யாக்கி இபொழுது இங்கே வந்து நிற்கிறவனே) 4
பரனே பஞ்சவன் பௌழியன் சோழன் பார் மன்னர் மன்னர் தாம் பணிந்து ஏத்தும் வரனே மாதவனே மதுசூதா மற்றோர் நற்றுணை நின்னலால் இலேன் காண் நரனே நாரணனே திரு நறையூர் நம்பீ எம்பெருமானும் பாராளும் அரனே ஆதி வராஹ முன்னானாய் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –7-7-4
பதவுரை Show / Hide
பரனே, Parane - பரமபுருஷனே! (- (அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!-))
பஞ்சவன் பூழியன் சோழன், Panjavan Puzhiyan Sozhan - பஞ்சவனென்றும் பூழியனென்றும் சோழனென்றும் பெயர் கொண்ட
பார் மன்னர் மன்னர் தாம், Paar Mannar Mannar Thaam - பூமிக்கு ராஜாதி ராஜர் களானவர்கள்
பணிந்து ஏத்தும், Panindhu Aethum - பணிந்து துதிக்கும் படியான
வரனே, Varane - சிறந்தவனே!
மாதவனே, Madhavane - திருமாலே!
மதுசூதா, Madhusoodha - மதுவென்னு மசுரனைக் கொன்றவனே!
நரனே நாரணனே, Naraney Narayananey - நரநாராயணாவதாரம் செய்தருளினவனே!
திரு நறையூர் நம்பீ, Thiru Naraiyur Nambee - திருநறையூரி லெழுந்தருளி யிருக்கின்ற பரிபூர்ணனே!
எம் பெருமான், Em Perumaan - எமக்குத் தலைவனே!
உம்பர் ஆளும் அரனே, Umbar Aalum Arane - தேவதைகளை ஆளவல்ல ருத்ரனுக்கு ஆந்தர்யா மியானவனே!
முன், Mun - முன்பொருகாலத்தில்
ஆதி வராகம் ஆனாய், Aadhi Varagam Aanai - ஆதிவராஹ மூர்த்தியாய் அவதரித்தவனே!
நின் அலால், Nin Alaal - உன்னையொழிய
மற்று ஓர் நல்துணை, Mattru Oru Nalthunai - வேறொரு நல்ல ரக்ஷகனை
இலேன், Ilaen - உடையேனல்லேன்.