திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1614 | பெரிய திருமொழி || (7-7–திருவுக்கும்) (திருவழுந்தூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவற்றால் வந்த நலிவை ஆற்றி இருப்போம் என்றால் ஆற்ற ஒண்ணாதபடி போகங்களைப் புஜிக்கவேணும் என்று ஐவர் நெருக்கி புஜிப்பிக்க அவர்களுக்கு அஞ்சி உன் திருவடிகளிலே சரணம் புகுந்தேன்) 7 | கறுத்துக் கஞ்சனை அஞ்ச முனிந்தாய் கார் வண்ணா கடல் போல் ஒளி வண்ணா
இறுத்திட்டான் விடை ஏழும் முன் வென்றாய் எந்தாய் அந்தரம் ஏழுமும் ஆனாய்
பொறுத்துக் கொண்டு இருந்தால் பொறுக்க ஒணாப் போகாமே நுகர்வான் புகுந்து ஐவர்
அறுத்துத் தின்றிட வஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் தின்ற வம்மானே –7-7-7 | பதவுரை Show / Hideகஞ்சனை அஞ்ச கறுத்து முனிந்தாய், Kanjanai Anja Karuthu Munindhai - கம்ஸனை அவன் பயப்படும்படி கோபித்து நிரஸித்தவனே! (- (அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!- ;)) கார் வண்ணா, Kaar Vanna - மேகம் போல் குளிர்ந்த வடிவையுடையவனே! கடல் போல் ஒளி வண்ணா, Kadal Pol Oli Vanna - கடல் போன்று அழகிய வடிவையுடையவனே! முன், Mun - முன்பொருகால் ஆன் விடை ஏழும் இறுத்திட்டு வென்றாய், Aan Vidai Ezhum Iruthittu Vendraai - ஏழு எருதுகளையும் முறித்துவென்றவனே! எந்தாய், Endhaai - எம்பெருமானே! முன், Mun - முற்காலமே தொடங்கி அந்தரம் ஏழும் ஆனாய், Andharam Ezhum Aanai - மேலுலகங்களேழுக்கும் நியாமகனானவனே!, பொறுத்துக் கொண்டு இருந்தால் பொறுக்க ஒணா, Poruththuk Kondu Irundhaal Porukka Ona - வருந்தி ஸஹித்துக் கொண்டிருப்போமென்றாலும் ஸஹிக்க முடியதாபடியான போகமே நுகர்வான் ஐவர் புகந்து, Pogame Nugharvaan Aivar Pugandhu - துக்கானுபவங்களையே பெறுவிப்பதற்காகப் பஞ்சேந்திரியங்கள் என்னிடம் வந்து சேர்ந்து அறுத்து தின்றிட, Aruththu Thinridha - ஹிம்ஸித்து ஆத்ம நாசத்தைப் பண்ண அஞ்சி, Anji - அதற்குப் பயப்பட்டு நின் அடைந்தேன், Nin Adaindhen - உன்னை ஆச்ரயித்தேன். |