திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1615 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1615பெரிய திருமொழி || (7-7–திருவுக்கும்) (திருவழுந்தூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வகுத்த ஸ்வாமியான நீ -ராஜ புத்ரனாய் பிறந்து முடி இழந்து போவாரைப் போலே ஆகாமே அடியேனாய் இருக்கிற என்னை நித்ய கைங்கர்யத்தைக் கொண்டு அருள வேணும் – ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு வந்து புகுரலாம் படி கடல்கரை வெளியிலே வந்து நின்றால் போலே எனக்கு உறவுமுறையார் கை விட்ட அன்று வந்து கிட்டலாம் படி அன்றோ தேவரீர் இங்கே வந்து நிற்கிறது) 8
நெடியானே கடியார் கலி நம்பீ நின்னையே நினைந்து இங்கு இருப்பேனைக் கடியார் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்த அக் காவலைப் பிழைத்துக் குடி போந்து உன்னடிக் கீழ் வந்து புகுந்தேன் கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி அடியேனைப் பணி யாண்டு கொள் எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே –7-7-8
பதவுரை Show / Hide
நெடியானே, Nedhiyaane - எல்லார்க்கும் மேற்பட்டவனே! (- (அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!-,))
கடி, Kadi - (பூமிக்கு) அரணாகிய
ஆர்கலி, Aarkali - ஸமுத்ரத்தில் (பள்ளி கொண்டிருக்கிற)
நம்பீ, Nambi - பூர்ணனே!
எந்தாய், Endhaai - எம்பெருமானே!
நின்னையே நினைந்து, Ninnaiye Ninaindhu - உன்னையே தியானித்துக் கொண்டு
இங்கு இருப்பேனை, Ingu Irippenai - இங்கு இருக்கிற என்னை
கடியார், Kadiyar - க்ரூரங்களாயும்
காளையார், Kaalaiaar - (ஹிம்ஸிப்பதில்) யௌவன பருவ முள்ளனவாயுமிருக்கிற
ஐவர், Aivar - பஞ்சேந்திரியங்கள்
புகுந்து, Pugunthu - என்னிடம் நெருங்கி
காவல் செய்த அக் காவலை பிழைத்து, Kaaval Seitha Ak Kaavalai Pizhaithu - (என்னை உன்னிடம் வரவொட்டாதபடி)தடை செய்த அந்தச் சிறைக்கு தப்பிவந்து
உன் அடி கீழ், Un Adi Keezh - உன் திருவடிகளின் கீழே
குடி போந்து, Kudi Ponthu - குடியிருக்கக் கருதி
வந்து புகுந்தேன், Vandhu Pugunthen - வந்து சேர்ந்தேன்;
எனக்கு, Enakku - அடியேனுக்கு
கூறை சோறு இவை தந்தருளி, Kooraik Sooru Ivai Thandharuli - துணியும் சோறுமாகிய இத் திருவடிகளைத் தந்தருளி
அடியேனை பணி ஆண்டு கொள், Adiyenai Pani Aandu Kol - அடியேனை நித்ய கிங்கரனாக்கிக் கொள்ள வேணும்