திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1616 | பெரிய திருமொழி || (7-7–திருவுக்கும்) (திருவழுந்தூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அப் படுக்கையிலே சாய்வது இருவரோடு சேர்த்தியோடு யாவது இனி நான் என்னுடைய ஹித விஷயமாக செய்வது ஓன்று அறியேன் ஐயோ ஐயோ என்று அநந்ய கதியான என் பக்கலிலே கிருபை பண்ணி அருள வேணும் கிருபை பண்ணுகைக்கு வந்து நிற்கிற இடம் இது அன்றோ) 9 | கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறிக் கூறை சோறு இவை தா என்று குமைத்துப்
போவார் நானவரைப் பொறுக்க கில்லேன் புனிதா புட்கொடியாய் நெடுமாலே
தீவாய் நாகணையில் துயில்வானே திருமாலே இனிச் செய்வது ஓன்று அறியேன்
ஆவா வென்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –7-7-9 | பதவுரை Show / Hideபுனிதா, Punithaa - பரிசுத்தனே! (- (புள் கொடியாய் கருடத்வஜனே!) (திருமாலே!, அடுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!- ;)) நெடுமாலே, Nedumaale - ஸர்வாதிகனே! தீ வாய் நாக அணையில் துயில்வானே, Thee Vaai Naaga Anaiyil Thuyilvaane - (பகைவர்மேலே) நெருப்பை உமிழ்கிற ஸர்ப்பமாகிய படுக்கையில் சயனித் திருப்பவனே! ஐவர், Aivar - பஞ்சேந்திரியங்கள் கோ ஆய், Ko Aai - என்னை நியமிப்பனவாய்க்கொண்டு என் மெய், En Meiy - என் சரீரத்தில் குடி ஏறி, Kudi Eri - குடிபுகுந்து கூறை சோறு இவை தா என்று, Kooraik Sooru Ivai Thaa Endru - துணியையும் சோற்றையும் கொடு என்று குமைத்து, Kumaitthu - அடர்த்துக் கொண்டிருந்து போகார் –, Pogaar - விட்டுப்போகின்றனவில்லை; நான், Naan - அடியேன் அவரை, Avarai - அவ்விந்திரியங்களின் கொடுமைகளை பொறுக்ககிலேன், Porukkakilain - ஸஹிக்கமாட்டுகின்றிலேன்; இனி செய்வது ஒன்று அறியேன், Ini Seivathu Ondru Ariyen - உன்னையே புகலாக நான் அடைந்தேனான பின்பு (என்னுடைய ஹிதத்துக்காக) நான் செய்து கொள்ளத்தக்கது ஒன்றுமறிகின்றிலேன்; அடியேற்கு, Adiyeerkku - அடியேன் விஷயத்தில் ஆ ஆ என்று, Aa Aa Endru - ஐயோவென்று இறை இரங்காய், Irai Irangai - சிறிது கிருபை செய்தருள வேணும். |