திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1617 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1617பெரிய திருமொழி || (7-7–திருவுக்கும்) (திருவழுந்தூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்பத்தையும் அப்யசிக்க வல்லார் –சிரகாலம் ராஜாக்களாய் -லோகங்களை அடைய நிர்வஹித்து பெரிய முத்தின் குடைக்கீழே இருந்து நிரவதிக ப்ரீதி யுக்தராய்ப் பெறுவார் – இந்த்ரிய வஸ்தையை அனுசந்தித்து அஞ்சின ஸ்ரீ ஆழ்வார் இத்தை பலமாகச் சொல்லுவான் என் என்னில் இவருக்கு அந்த ஐஸ்வர்யம் பாகவத சேஷமாக்குக்கைக்கு உடலாகையாலே அதுவும் புருஷார்த்தத்திலே புக்குப் போய்த்து காண்-என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தாராம்) 10
அன்னம் மன்னும் பைம் பூம் பொழில் சூழ்ந்த அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானைக் கன்னி மன்னு திண் தோள் கலிகன்றி ஆலி நாடன் மங்கைக் குல வேந்தன் சொன்ன இந் தமிழ் நன் மணிக் கோவை தூய மாலை இவை பத்தும் வல்லார் மன்னி மன்னவராய் உலகாண்டு மான வெண் குடைக் கீழ் மன்னுவாரே –7-7-10
பதவுரை Show / Hide
அன்னம் மன்னு, Annam Mannu - அன்னப்பறவைகள் பொருந்திவாழ்கிற
பை பூ பொழில் சூழ்ந்த, Pai Poo Pozhil Soozhntha - பரந்த பூஞ்சோலைகளாற் சூழப்பட்ட
அழுந்தூர், Azhundhoor - திருவழுந்தூரில்
மேல் திசை நின்ற, Mel Thisai Nindra - மேலைத்திக்கில் எழுந்தருளியிருக்கின்ற
அம்மானை, Ammaanai - எம்பெருமானைக்குறித்து,-
கன்னி மன்னு திண் தோள், Kanni Mannu Thin Thol - ஒரு நாளு மழியாத மிடுக்கை யுடைய தோள்களை யுடையராய்
ஆலி நாடன், Aali Naadan - திருவாலிநாட்டுக்குத் தலைவராய்
மங்கை, Mangai - திருமங்கையிலுள்ளார்க்கு
குலம் வேந்தன், Kulam Vendan - குலக்கிரமமக வந்த ராஜாவான
கலிகன்றி, Kalikanri - ஆழ்வார்
சொன்ன, Sonna - அருளிச்செய்த
இன் தமிழ், In Tamil - மதுரமான தமிழ்ப்பாஷையினாலாகிய!
நல் மணி கோவை, Nal Mani Kovai - நல்ல ரத்னமாலை போலச் சிறந்த
தூய மாலை இவை பத்தும், Thuya Maalai Ivai Paththum - பரிசுத்தமான இந்தச் சொல்மாலைகள் பத்தையும்
வல்லார், Vallar - ஓதி யுணருமவர்
மன்னவர் ஆய், Mannavar Aay - பிரபுக்களாய்
மன்னி, Manni - நெடுநாள் வாழ்ந்து
உலகு ஆண்டு, Ulaku Aandu - லோகங்களை அரசாட்சி செய்துக்கொண்டு
மானம், Maanam - பெரிய
பெண் குடை கீழ், Pen Kudai Keezh - வெண்குடை நிழலிலே இருந்து
மகிழ்வர், Magizhvar - மகிழப்பெறுவர்.