திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1619 | பெரிய திருமொழி || (7-8–செங்கமலம்) (திருவழுந்தூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அன்னமானது அப்பூம் படுக்கையிலே போக ஸ்ரோதஸ்ஸில் தன்னை விஞ்சின பெடையோடு ஒக்க சாய்கிற நிரவதிக சம்பத்தை உடைய –அங்குத்தை திர்யக்குகளும் அகப்பட போக பிரதாநமாய்த்து இருப்பது) 2 | முன்னிவ் வுலகேழும் இருள் மண்டி யுண்ண முநிவரோடு தாநவர்கள் திசைப்ப வந்து
பன்னு கலை நாலு வேதப் பொருளை எல்லாம் பரிமுகமாய் அருளிய வெம்பரமன் காண்மின்
செந்நெல் மலி கதிர்க் கவரி வீசச் சங்க மவை முரலச் செங்கமல மலரை ஏறி
அன்னமலி பெடையோடு மமரும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த யமரர் கோவே –7-8-2 | பதவுரை Show / Hideசெந்நெல் மலி கதிர், Sennel Mali Kathir - செந்நெற் பயிரினது (நெல்) நிரம்பிய கதிர்கள் (- (அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோ -;) (யாவனென்னில்;)) கவரி வீச, Kavari Veesa - சாமரங்கள் போல் அசைந்தாடா நிற்கவும் சங்கம் அவை முரல், Sangam Avai Murali - அசைந்தாடா நிற்கவும் சங்கங்கள் ஒலியா நிற்கவும் அன்னம், Annam - ஆண் அன்னங்கள் மலி பெடை யோடும், Mali Pedai Yodum - (தம்மிடத்தில் அன்பு) மிக்குள்ள பெண்ணன்னங்களுடனே செம் கமலம் மலரை ஏறி அமரும், Sem Kamalam Malaiyai Eri Amarum - செந்தாமரை மலர்களின் மிது ஏறி வீற்றிருக்கப் பெற்ற செல்வத்து, Selvathu - சிறப்பையுடைய முன், Mun - முற்காலத்தில் இ ஏழ் உலகும், I Ezh Ulakum - இந்த ஏழுலகங்களையும் இருள் –, Irul - (அஜ்ஞாநமாகிற) அந்தகாரமானது மண்டி உண்ண, Mandi Unna - மிகுந்து தன்வசமாக்கிக் கொள்ள (அதனால்) முனிவரொடு தானவர்கள் திசைப்ப, Munivarotu Thanavarkal Thisaippa - முனிவர்களும் அசுரர்களும் அறிவு கெட்டுக் கலங்க, (அப்பொழுது) வந்து, Vandu - திருப்பாற்கடலினின்று திருவவதரித்து பன்னு, Pannu - பரவிய கலை, Kalai - (அங்கங்களாகிய) சாஸ்திரங்களை யுடைய நால்வேதம், Naalvedham - நான்கு வேதங்களினது பொருளை எல்லாம், Porulai Ellam - அர்த்தங்களையெல்லாம் பரி முகம் ஆய், Pari Mukam Aayi - ஹயக்ரீவமூர்த்தியாய் அருளிய, Aruliyam - மீட்டுக்கொணர்ந்தருளிய எம் பரமன், Em Paraman - நமது சிறந்த கடவுளாவன். |