திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1620 | பெரிய திருமொழி || (7-8–செங்கமலம்) (திருவழுந்தூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரிதர் உடைய விரோதியைப் போக்கி –அவர்கள் உடைய அபேஷிதம் சம்விதானம் பண்ணும் ஸ்வபாவன் என்கிற சுத்தியை எனக்கு பிரகாசிப்பித்தவன் கிடீர்) 3 | குலத்தலைய மத வேழம் பொய்கை புக்குக் கோள் முதலை பிடிக்க வதற்கு அனுங்கி நின்று
நிலத்திகழும் மலர்ச் சுடரேய் சோதி யென்ன நெஞ்சிடர் தீர்த்து அருளிய வென் நிமலன் காண்மின்
மலைத் திகழ் சந்தகில் கனக மணியும் கொண்டு வந்துந்தி வயல்கள் தோறும் மடைகள் பாய
அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-3 | பதவுரை Show / Hideமலை திகழ் சந்து அகில் கனகம் மணியும், Malai Thigazh Sandhu Akil Kanagam Maniyum - ஸஹ்யமலையினிடத்துப் பொருந்தி விளங்குகின்ற சந்தன மரங்களையும் அகிற் கட்டைகளையும் பொன்னையும் ரத்னங்களையும் (- அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோ-; (யாவனென்னில்)) கொண்டு வந்து, Kondhu Vandu - திருட்டிக்கொணர்ந்து உந்தி, Undhi - தள்ளி வயல்கள் தோறும் மடைகள் பாய, Vayalgal Thorum Madaigal Paaya - கழினிகளிலெல்லாம் நீர்பாயும் அலைத்து வரும், Alaitthu Varum - அலையெறிந்து கொண்டு வாரா நின்றுள்ள பொன்னி, Ponni - காவேரியினால் வளம் பெருகும், Valam Perugum - செழிப்பு மிகப்பெற்ற செல்வத்து, Selvathu - சிறப்பையுடைய குலம் தலைய மதம் வேழம், Kulam Thalaiya Madham Vezham - நல்ல சாதியிற் பிறந்த யானைகட்குள்ளே தலைமையையுடைய மதங்கொண்ட கஜேந்திராழ்வான் பொய்கைபுக்கு, Poykaipukku - தடாகத்திலிறங்கின போது கோள் முதலை பிடிக்க, Kol Muthalai Pidikka - வலிமையையுடைய முதலையானது (தன்னைப்) பிடித்திழுத்ததனால் அதற்கு அணுங்கி நின்று, Adharku Anungi Nindru - அம்முதலைக்கு அஞ்சி நின்று நில திகழும் மலர் சுடர் ஏய் சோதீ, Nila Thigazhum Malar Sudar Aye Sothi - நிலாவிளங்குகின்ற பரவுதலையுடைய சந்திரனை ஒத்த குளிர்ந்த ஒளியை (தண்ணளியை) யுடையவனே! என்ன, Enna - என்று ஓலமிட்டுத்துதிக்க நெஞ்சு இடர் தீர்த்து அருளிய, Nenju Idar Theerthu Aruliya - (அந்த கஜேந்திரனது) மனத்துன்பத்தை நீக்கியருளிய எம் நிமலன், Em Nimalan - எமது குற்றமற்ற கடவுளாவன. |