திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1621 | பெரிய திருமொழி || (7-8–செங்கமலம்) (திருவழுந்தூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அண்டபித்தியிலே புக்குச் சேர்ந்த பூமியை இடந்து எடுத்துக் கொண்டு ஏறி –அந்த பூமிக்கும் அபிமானியான ஸ்ரீ பூமிப் பிராட்டியை அணைத்து- அந்த பூமி தன்னை திரு எயிற்றிலே ஒரு நீல மணி அழுத்தினால் போலே வைத்து அருளின அச் செயலைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவன் கிடீர் – நிரவதிக சம்பத்தை உடைத்தாய் –சம்சார விபூதிக்கு ஆபரணம் போலே இருக்கிற ஸ்ரீ திரு அழுந்தூரிலே) 4 | சிலம்பு முதல் கலன் அணிந்தோர் செங்கற்குன்றம் திகழ்ந்தது எனத் திரு உருவம் பன்றியாகி
இலங்கு புவி மடந்தை தனை யிடந்து புல்கி எயிற்றிடை வைத்து அருளிய வெம்மீசன் காண்மின்
புலம்பு சிறை வண்டு ஒலிப்பப் பூகம் தொக்கப் பொழில்கள் தொறும் குயில் கூவ மயில்கள் ஆல
அலம்பு திரைப் புனல் புடை சூழ்ந்து அழகார் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-4 | பதவுரை Show / Hideபூகம் தொக்க, Pookam Thokka - பாக்கு மரங்கள் நிறைந்துள்ள (- அணி அழுந்தூர் நின்ற உதந்த அமரர் கோ-; (யாவனென்னில்)) பொழில்கள் தோறும், Pozhilgal Thorum - சோலைகளிலெங்கும் சிறை புலம்பு வண்டு ஒலிப்ப, Sirai Pulambu Vandu Olippa - சிறகு களையுடையனவாய் ரீங்காரஞ் செய்யுந்தன்மை யனவான வண்டுகள் ஒலிக்கவும் குயில் கூவ, Kuyil Koova - குயில்கள் கூவவும் மயில்கள் ஆல, Mayilgal Aala - மயில்கள் கூத்தாடவும் அலம்பு திரை புனல் புடை சூழ்ந்து, Alambu Thirai Punal Pudai Soozhndhu - அலைகின்ற அலைகளை யுடைய காவிரியின் நீரானத பக்கங்களிலே சுற்றிப் பாய்தலினால் அழகு ஆர், Azhagu Aar - அழகு மிக்கிருக்கின்ற செல்வத்து, Selvathu - சிறப்பையுடைய செம் கண் ஓர் குன்றம், Sem Kan Or Kuntram - சிவந்த கண்களை யுடையதொரு மலை சிலம்பு முதல் கலன் அணிந்து, Silambu Mudhal Kalan Anindhu - தண்டை முதலிய ஆபரணங்களைப் பூண்டு திகழ்ந்தது என, Thigazhnthathu Ena - விளங்குவது போல திரு உருவம் பன்றி ஆகி, Thiru Uruvam Pandri Aagi - மஹாவராஹரூபியாய், இலங்கு புவி மடந்தை தனை, Ilangu Puvi Madanthai Thanai - விளங்குகின்ற பூமிப்பிராட்டியை இடந்து, Idandhu - (அண்டபித்தியினின்றுங் கோட்டாற்) குத்தியெடுத்து புல்கி, Pulki - அணைந்து எயிற்றிடை, Eyirtridai - (தனது) கோரதந்தத்தினிடத்தில் வைத்து அருளிய, Vaiththu Aruliyah - வைத்தருளினவனான எம் ஈசன், Em Eesan - எமது தலைவனாவன். |