திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1622 | பெரிய திருமொழி || (7-8–செங்கமலம்) (திருவழுந்தூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ நரசிம்ஹத்துக்கும் பிற்காலியாத மிடுக்கை உடைய ஹிரண்யன் உடைய உடலைக் கீண்டு – அவள் உடைய முலை வழியே அவளுடைய பிராணங்களும் வற்றி வரும்படி முலையை அமுது செய்த ஆச்சர்ய பூதன் கிடி கோள் இங்கு வந்து நிற்கிறவன்) 5 | சின மேவும் அடல் அரியின் உருவமாகித் திறல் மேவும் இரணியனது ஆகம் கீண்டு
மன மேவும் வஞ்சனையால் வந்த பேய்ச்சி மாள வுயிர் வவ்விய வெம்மாயோன் காண்மின்
இனமேவும் வரி வளைக்கை ஏந்தும் கோவை ஏய்வாய மரகதம் போல் கிளியின் இன்சொல்
அனமேவு நடை மடவார் பயிலும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-5 | பதவுரை Show / Hideஇனம் மேவு வரி வளை கை ஏந்தும், Inam Mevu Vari Valaik Aenthum - கூட்டமாக அணியப்பெற்ற கோடுகளையுடைய வளையல்களை யணிந்த (தமது) கைகளிலே ஏந்தப் பெற்றதும் (- அணி அழுந்தூர் நன்று உகந்த அமரர் கோ-; (யாவனென்னில்) (எம் மாயோன் காண்மின்)) கோவை ஏய் வாய, Kovai Aey Vaai - கொவ்வைக்கனியை யொத்த வாயையுடையதும் மரகதம் போல், Maragatham Pol - மரகதரத்னம் போலப் பச்சை நிறமுடையதுமான கிளியின், Kiliyin - கிளியைப் போன்ற இன் சொல், In Sol - மதுரமான சொற்களையும் அனம் மேவும் நடை, Anam Mevum Nadai - அன்னப்பேடை போன்ற நடையழகையுமுடைய மடவார், Madavaar - இளமகளிர் பயிலும், Payilum - மிகுதியாகப் பொருந்தப்பெற்ற செல்வத்து, Selvathu - சிறப்பையுடைய சினம் மேவும் அடல் அரியின் உருவம் ஆகி, Sinam Mevum Adal Ariyin Uruvam Aagi - மிக்க சீற்றங்கொண்டுள்ள வலிய நரசிங்க மூர்த்தியாய் திறல் மேவும் இரணியனது ஆகம் கீண்டு, Thiral Mevum Iraniyanathu Aagam Keendu - மிக்க பராக்ரமமமைந்த ஹிரண்யாஸுரனது மார்பைப் பிளந்து மனம் மேவு வஞ்சனையால் வந்த, Manam Mevu Vanjanaiyahl Vantha - மனத்திற் கொண்டுள்ள வஞ்சக குணத்தோடு (தன்னைக்கொல்ல) வந்த பேய்ச்சி, Peychchi - பூதனையென்னும் பேய்மகள் மாள, Maal - இறக்கும்படி உயிர வௌவிய, Uyira Vauviyah - (அவளது) உயிரைக் கவர்ந்த |