திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1625 | பெரிய திருமொழி || (7-8–செங்கமலம்) (திருவழுந்தூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அனுகூல ஸ்பர்சம் ஒழிய த்ரவ்யம் ஒழிய செல்லாமையாலே பரிமள பிரசுரமான பூவை உடைத்தான குழலை உடைய யசோதை பிராட்டி வைத்த தயிரையும் வெண்ணெயும் அமுது செய்து அத்தாலே பெறாப் பேறு பெற்றானாக இருக்கிற ஆச்சர்ய பூதன் கிடீர்) 8 | கும்ப மிகு மத வேழம் குலைய கொம்பு பறித்து மழ விடை யடர்த்துக் குரவை கோத்து
வம்பவிழும் மலர்க் குழலாள் யாய்ச்சி வைத்த தயிர் வெண்ணெய் உண்டு உகந்த மாயோன் காண்மின்
செம்பவள மரகதம் நன் முத்தம் காட்டத் திகழ் பூகம் கதலி பல வளம் மிக்கு எங்கும்
அம் பொன் மதிள் சூழ்ந்து அழகார் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த வமரர் கோவே –7-8-8 | பதவுரை Show / Hideசெம் பவளம் மரதகம் நல் முத்தம் காட்ட திகழ் பூகம், Sem Pavalam Maradhagam Nal Muththam Kaata Thigazh Poogam - செந்நிறமன பவழத்தையும் (பசுநிறமான) மரகதத்தையும் (வெண்ணிறமான) முத்தையும் தம்மிடத்தில் தோற்றும்படி விளங்குகின்ற பாக்குமரங்களும் (- அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோ-; (யாவனென்னில்;)) பல கதலி, Pala Kathali - பல வாழை மரங்களும் வளம் மிக்க, Valam Mikka - செழிப்பு மிகுந்து, எங்கும், Engum - எல்லாப் பக்கங்களிலும் அம் பொன் மதிள் பொழில் புடை சூழ்ந்து, Am Pon Mathil Pozhil Pudai Soozhndhu - அழகிய பொன் மயமான மதிள்களாலும் சோலைகளாலும் சுற்றிலும் சூழப்பெற்று அழகு ஆர், Azhagu Aar - அதனால் அழகு நிறைந்த செல்வத்து, Selvathu - சிறப்பையுடைய கும்பம் மிகு, Kumbam Miku - மஸ்தகம் பருத்திருக்கப் பெற்றதாய் மதம், Matham - மதத்தையுடைத்தான வேழம், Vezham - (குவலயாபீடமென்னும்) யானை குலைய, Kulaiya - அழியும்படி கொம்பு பறித்து, Kombu Pariththu - அதன் தந்தங்களைப் பறித்தும் மழவிடை அடர்த்து, Mazhavidai Adarththu - இளமையான ஏழு எருதுகளை வலியடக்கியும் குரவை கோத்து, Kuravai Koathu - (ஆய்ச்சியரோடு) குரவைக் கூத்தாடியும் வம்பு அவிழும், Vambu Avizhum - நறுமணம் வீசுகின்ற மலர், Malar - மலர்களைச் சூடியுள்ள குழலாள், Kuzhalal - கூந்தலை யுடையவளாகிய ஆய்ச்சி, Aaychi - யசோதையென்னும் இடைச்சி வைத்த, Vaiththa - (உறிகளில் சேமித்து) வைத்திருந்த தயிர், Thayir - தயிரையும் வெண்ணெய், Vennaiy - வெண்ணெயையும் உண்டு, Undu - புஜித்தும் உகந்த, Ugantha - மனமகிழ்ந்திருந்த மாயோன் காண்மின், Maayon Kaanmin - விசித்ர சக்தியை யுடையவன் |