திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1628 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1628பெரிய திருமொழி || (7-9–கள்ளம் மனம்) (திருச்சிறுபுலியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உகந்து அருளின நிலங்களும் இவர் திரு உள்ளமும் ஒக்க வாய்த்து அவன் விரும்பி இருப்பது – இப்படி இருக்கையாலே ஆஸ்ரயிப்பாருக்கு ஆஸ்ரயநீய ஸ்தானம் இவை இரண்டும் யாய்த்து – சல சயனன் -என்றது-அது அவனுக்குத் திரு நாமமாய்-ஜல சயனன் வர்த்திக்கிற இடம் சல சயனம் என்று ஊருக்கு பெயராகிறது) 1
கள்ளம் மனம் விள்ளும் வகை கருதிக் கழல் தொழுவீர் வெள்ளம் முது பரவைத் திரை விரியக் கரையெங்கும் தெள்ளும் மணி திகழும் சிறு புலியூர்ச் சல சயனத் துள்ளும் எனதுள்ளத் துள்ளும் உறைவாரை உள்ளீரே –7-9-1
பதவுரை Show / Hide
மனம், Manam - மனத்தில் நின்றும்
கள்ளம், Kallam - க்ருத்ரிமச்செயல்
விள்ளும் வகை கருதி, Vizhllum Vagai Karuthi - விட்டு நீங்கவேண்டும் வகையை விரும்பி
கழல் தொழுவீர், Kazhal Thozuveer - (எம்பெருமானுடைய) திருவடிகளை ஆச்ரயிக்க வேண்டியிருக்கிறவர்களே!
முது பரவை, Muthu Paravai - பழையதான கடலினுடைய
திரை, Thirai - அலைகளினாலுண்டான
வெள்ளம், Vellam - ப்ரவாஹமானது
கரை எங்கும் விரிய, Karai Engum Viriya - கரைகளிலெல்லாம் பரவாநிற்க,
தெள்ளும், Thellum - (அவ்வலைகளினால்) கொழிக்கப்பட்ட
மணி, Mani - ரத்ணங்கள்
திகழும், Thigazhume - விளங்கப்பெற்ற
சிறுபுலியூர், Sirupuliyoor - சிறுபுலியூரில்
சலசயனத் துள்ளும், Salasayanath Thullum - சலசயனமென்கிற ஸந்நிதியினுள்ளும்
எனது உள்ளத் துள்ளும், Enathu Ullath Thullum - என்னுடைய ஹ்ருதயத்தினுள்ளும்
உறைவாரை, Uraivaarai - நித்யவாஸம் பண்ணுகிற பெருமானை
உள்ளீர், Ullir - சிந்தனை செய்யுங்கள்.