திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1630 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1630பெரிய திருமொழி || (7-9–கள்ளம் மனம்) (திருச்சிறுபுலியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கண்டிகோளே நாம் இருக்கிறபடி நீங்களும் இப்படியே இருக்கப் பாருங்கோள் -என்கிறார் – ஸ்ரீ சிறு புலியீர் சல சயனத்தில் நித்ய வாஸம் பண்ணுகிற ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய திருவடிகளை ஒழிய வேர் ஒன்றை த்யாஜ்யதயா வாகிலும் அறிவது ஓன்று இல்லை) 3
பறையும் வினை தொழுது உய்மின் நீர் பணியும் சிறு தொண்டீர் அறையும் புனல் ஒரு பால் வயல் ஒரு பால் பொழில் ஒரு பால் சிறை வண்டினம் அறையும் சிறு புலியூர்ச் சல சயனத் துறையும் மிறையடி யல்லது ஓன்று இறையும் அறியேனே –7-9-3
பதவுரை Show / Hide
பணியும் சிறு தொண்டீர், Paniyum Siru Thondheer - (தகாதவிஷயங்களில்) பணிவுள்ள சிறுதொண்டர்களே! (- (தொழுதலால்) (சிறுபுலியூர், சலசயனத்து-;))
நீர், Neer - நீங்கள்
தொழுது, Thozhudhu - (சிறுபுலியூர்ச் சலசயனத்தைத்) தொழுது
உய்மின், Uymin - உஜ்ஜீவியுங்கள்;
வினை, Vinai - பாவங்கள்
பறையும், Paraiyum - தொலைந்துபோம்;
ஒருபால், Orupaal - ஒருபக்கத்திலுள்ள
அறையும் புனல், Araiym Punal - ஒலிக்கின்ற ஜல்த்திலும்
ஒருபால், Orupaal - மற்றொருபக்கத்திலுள்ள
வயல், Vayal - கழனிகளிலும்
ஒருபால், Orupaal - மற்றுமொருபக்கத்திலு்ள
பொழில், Pozhil - சோலைகளிலும்
சிறை வண்டு இனம் அறையும், Sirai Vandu Inam Araiym - சிறகுகளையுடைய வண்டுத் திரள்கள் ரீ்ங்காரஞ் செய்யப்பெற்ற
உறையும், Uraiyum - பொருந்திவாழ்கின்ற
இறை, Irai - பெருமானுடைய
அடி அல்லது, Adi Allathu - திருவடிகளையன்றி
ஒன்று, Ondru - வேறொன்றை
இறையும், Iraiyum - சிறிதும்
அறியேன், Ariyen - அறியமாட்டேன்.