திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1631 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1631பெரிய திருமொழி || (7-9–கள்ளம் மனம்) (திருச்சிறுபுலியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தம்மை அவர்கள் ஆப்தராக நினைத்து இருக்கிறபடியால் தாம் சொல்லிற்று கேட்பார்கள் -என்று பார்த்து தம்படியை அவர்களுக்கு அறிவித்து-நீங்களும் என்னைப் போலே அவனைக் கொண்டு உங்கள் விரோதிகளைப் போக்கிக் கொள்ளப் பாருங்கோள் என்கிறார்) 4
வானார் மதி பொதியும் சடை மழுவாளி யொடு ஒருபால் தானாகிய தலைவனவன் அமரர்க்கு அதிபதியாம் தேனார் பொழில் தழுவும் சிறு புலியூர் சல சயனத் தானாயனது அடி அல்லது ஓன்று அறியேன் அடியேனே –7-9-4
பதவுரை Show / Hide
ஒருபால், Orupaal - திருமேனியினொரு பக்கத்தில் (- (அடியேன் அறியேன்-))
வான் ஆர் மதி பொதியும் சடை, Vaan Aar Mathi Pothiyum Sadai - ஆகாசத்திலே பொருந்தி யிருக்கிற சந்திரன் அடங்கிய ஜடையை யுடையவனாய்
மழுவாளி யொடு, Mazhuvaali Yodu - மழுவேந்தியான சிவனோடு கூடி
தான் ஆகிய தலைவன் அவன், Thaan Aagiya Thalaivan Avan - தான் என்று சொல்லப்படும் தலைவனாயிருப்பவனும்
அமரர்க்கு அதிபதி ஆம், Amararukku Adhipathi Aam - தேவர்கட்கு இறைவனான இந்திரனும் தானாயிருப்பவனும்,
தேன் ஆர் பொழில் தழுவும், Then Aar Pozhil Thazhuvum - தேன் நிறைந்த சோலைகள் தழுவப்பெற்ற
சிறுபுலியூர், Sirupuliyoor - திருச்சிறுபுலியூரிலே
சலசயனத்து, Salasayanathu - சலசயனமென்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனுமான
ஆன் ஆயனது, Aan Aayanathu - கோபாலக்ருஷ்ணனுடைய
அடி அல்லது, Adi Allathu - திருவடிகளையன்றி
ஒன்று, Ondru - மற்றொன்றையும்