திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1632 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1632பெரிய திருமொழி || (7-9–கள்ளம் மனம்) (திருச்சிறுபுலியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அல்லாதார் செய்தபடி செய்ய அநந்ய கதியான என் பக்கலிலே உன்னுடைய கண் அழிவற்ற கிருபையைப் பண்ணி அருள வேணும்) 5
நந்தா நெடு நரகத்திடை நணுகா வகை நாளும் எந்தாய் என இமையோர் தொழுது ஏத்தும் இடம் எறிநீர்ச் செந்தாமரை மலரும் சிறு புலியூர்ச் சலசயனத்து அந்தாமரை யடியாய் உனதடியேற்கு அருள் புரியே –7-9-5
பதவுரை Show / Hide
இமையோர், Imaiyor - தேவர்கள்
நாளும், Naalum - நாள்தோறும்
எந்தாய் என, Endhai Enna - எம்பெருமானே! என்று சொல்லி
தொழுது, Thozhudhu - அடிபணிந்து
ஏத்தும், Aethum - துதிக்கப்பெற்ற
இடம், Idam - திவ்யதேசமாய்
எறி நீர் செந்தாமரை மலரும் சிறுபுலியூர், Eri Neer Senthamarai Malarum Sirupuliyur - அலைமோதும் நீர் நிலைகளிலே செந்தாமரைப் பூக்கள் மலரப்பெற்றதான சிறுபுலியூரிலுள்ளதான
சலசயனத்து, Salasayanathu - சலசயனக்கோயிலிலே (எழுந்தருளியிருக்கிற)
அம் தாமரை அடியாய், Am Thamarai Adiyaai - அழகிய தாமரைப் பூப்போன்ற திருவடிகளை யுடையவனே!
நந்தா நெடு நரகத்திடை, Nandha Nedu Naragathidai - அழிவில்லாத பெரிய நரகத்திலே
நணுகாவகை, Nanugavakai - (நான்) சேராதபடி
உனது அடியேற்கு அருள் புரி, Unathu Adiyerku Arul Puri - உன் அடியானான என் திறத்தில் க்ருபை பண்ணவேணும்,