திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1633 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1633பெரிய திருமொழி || (7-9–கள்ளம் மனம்) (திருச்சிறுபுலியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ சிறுபுலியீர்ச் சலசயனத்தை தொழுகையே ஸ்வபாவமாக உடையாருடைய திருவடிகளைத் தொழுவார்க்கு துக்கங்கள் நில்லா –அவை தன்னடியே விட்டுப் போம்) 6
முழு ஆம்பலும் அலர் ஆம்பலும் அரவிந்தமும் விரவிக் கழுநீரொடு மடவாரவர் கண் வாய் முக மலரும் செழுநீர் வயல் தழுவும் சிறுபுலியீர்ச் சலசயனம் தொழு நீர்மை யது உடையார் அடி தொழுவார் துயர் இலரே –7-9-6
பதவுரை Show / Hide
முழு நீலமும், Muzhu Neelamum - பூர்த்தியாகக் கறுத்திருக்கிற நீலோற்பவமும் (- (சிறுபுலியூர், சலசயனத்தை-,))
ஆம்பல் மலரும், Aambal Malarum - ஆம்பல் மலர்களும்
அரவிந்தமும், Aravindhamum - தாமரைகளும்
கழுநீரொடு, Kazhunirodu - செங்கழுநீர்ப் பூக்களும்
விரவி, Viravi - சேர்ந்து
மடவாரவர், Madavaaravar - (அங்குள்ள) மாதர்களினுடைய
கண், Kan - கண்கள் போலவும்
வாய், Vaai - அதரம் போலவும்
முகம், Mugam - முகம் போலவும்
அலரும், Alarum - விகஸிக்கப்பெற்ற
செழு நீர் வயல், Sezhu Neer Vayal - செழித்த நீர் நிறைந்த வயல்களினால்
தழுவும், Thazhuvum - சுற்றுஞ் சூழப்பட்ட
தொழும் நீர்மையது உடையார், Thozhum Neermaiyathu Udaiyaar - தொழுகையையே ஸ்வபாவமாக வுடையவர்களினுடைய
அடி, Adi - திருவடிகளை
தொழுவார், Thozhuvar - தொழுமவர்கள்
துயர் இலர், Thuyar Ilan - துக்கமற்றவரார்.