திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1634 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1634பெரிய திருமொழி || (7-9–கள்ளம் மனம்) (திருச்சிறுபுலியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உன் திருவடிகளில் அசாதாரணராய் இருப்பார் ஹிருதயங்களில் உள்ளாயோ –அடியேன் அறிகிறேன் இல்லை – எனக்கு இது தெரிய அருளிச் செய்ய வேணும் – இத்தால் சொல்லிற்று ஆயத்து –ஸ்ரீ சௌபரி பல வடிவு கொண்டால் போலே இவ்வோ இடங்கள் தோறும் இனி அவ்வருகு இல்லை என்னும்படி குறைவற வர்த்திக்கிற படியைக் காட்டிக் கொடுத்தான்) 7
சேயோங்கு தண் திருமாலிரும் சோலை யுறையும் மாயா வெனக்கு உரையாய் இது மறை நான்கினுளாயோ தீயோம்புகை மறையோர் சிறுபுலியூர்ச் சலசயனத் தாயோ வுனதடியார் மனத்தாயோ வறியேனே –7-9-7
பதவுரை Show / Hide
சேய் ஓங்கு, Sei Ongu - மிகவும் உயர்ந்ததாய்
தண், Than - குளிர்ந்ததான
திருமாலிருஞ் சோலைமலை, Thirumaalirunj Cholaimalai - திருமாலிருஞ்சோலை மலையிலே
உறையும், Uraiyum - நித்யவாஸஞ்செய்கிற
மாயா, Maayaa - ஆச்சரியனே!  (நீ)
மறை நான்கினுளாயோ, Marai Naankinulayo - நால் வேதங்களினுள்ளே இருக்கின்றாயோ?
தீ ஓம்பு, Thii Oombu - ஹோமத்தீயை வளர்க்கின்ற
கை, Kai - கையையுடையரான
மறையோர், Maraiyore - வைதிகர்கள் வாழ்கின்ற
சிறு புலியூர் சலசயனத் தாயோ, Siru Puliyur Salasayanath Thaayo - சிறுபுலியூரில் சலசயனக் கோயிலுள்ளாயோ?
உனது அடியார் மனத் தாயோ, Unathu Adiyaar Manath Thaayo - உனது அன்பர்களின் நெஞ்சிலுள்ளாயோ?
அறியேன், Ariyen - அறிகின்றிலேன்;
எனக்கு இது உரையாய், Enakku Ithu Urayai - எனக்கு இதை(த் தெரிய) அருளிச் செய்யவேணும்.