திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1636 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1636பெரிய திருமொழி || (7-9–கள்ளம் மனம்) (திருச்சிறுபுலியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நிரதிசய போக்யனாய்க் கொண்டு ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடும் கூட சிறுபுலியூர்ச் சல சயனத்த்திலே சாய்ந்து அருளினவனே-ஸ்ரீ யபதியான உனது திருவடிகளை ஒழிய எனக்கு வேறு ஒரு புகல் இல்லை பிராப்யம் இல்லை) 9
கருமா முகிலுருவா கனலுருவா புனலுருவா பெருமால் வரை யுருவா பிறவுருவா நினதுருவா திருமா மகள் மருவும் சிறுபுலியூர்ச் சல சயனத்து அருமா கடலமுதே யுனதடியே சரணாமே –7-9-9
பதவுரை Show / Hide
கரு மா முகில் உருவா, Karuma Mukil Uruva - கறுத்துப் பெருத்த மேகம் போன்றவடிவையுடையவனே! (- (சிறுபுலியூர் சலசயனத்து-;))
கனல் உருவா, Kanal Uruva - (அன்பில்லாதார்க்கு அணுகவொண்ணாதபடி) நெருப்பைப்போலும் உருவமுடையவனே!
புனல் உருவா, Punal Uruva - நீர்போலே குளிர்ந்த வடிவையுடையவனே!
பெரு மால் வரை உருவா, Perumal Varai Uruva - மிகவும் பெரிய மலைபோன்ற உருவத்தையுடையவனே!
பிற உருவா, Pira Uruva - மற்றுமுள்ள பொருள்களையும் வடிவாக வுடையவனே!
நினது உருவா, Ninathu Uruva - உனக்கு அஸாதாரணமான திவ்யமங்களவிக்ரஹத்தை யுடையவனே!
திரு மா மகள் மருவும், Thiru Ma Magal Maruvum - பெரிய பிராட்டியார் பொருந்தி வாழ்கிற
அரு மா கடல் அமுதே, Aru Ma Kadal Amudhe - பெறுதற்கரிய சிறந்த கடலமுதம் போன்றவனே!
உனது அடியே, Unathu Adiye - உனது திருவடிகளே
சரண் ஆம், Saran Aam - (அடியேனுக்கு) புகலிடமாம்.