திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1637 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1637பெரிய திருமொழி || (7-9–கள்ளம் மனம்) (திருச்சிறுபுலியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பாபம் வருகைக்கு யோக்யமான தேசத்திலே இருக்கச் செய்தேயும் இவற்றை வாயாலே சொல்லி ஆஸ்ரயிக்க- பாபங்கள் தானே நமக்கு இவ்விடம் இருப்பிடம் அல்ல -என்று விட்டுப் போம்) 10
சீரார் நெடுமறுகில் சிறுபுலியூர்ச் சல சயனத்து ஏரார் முகில் வண்ணன் தன்னை இமையோர் பெருமானைக் காரார் வயல் மங்கைக்கு இறை கலியன் ஒலி மாலை பாரார் இவை பரவித் தொழப் பாவம் பயிலாவே –7-9-10
பதவுரை Show / Hide
சீர் ஆர் நெடு மறுகில், Seer Ar Nedum Marukil - சீர்மைபொருந்திய நீண்ட திருவீதிகளை யுடைத்தான (- சலசயனக்கோயிலிலே (எழுந்தருளியிருக்கின்ற))
சிறுபுலியூர், Sirupuliyoor - சிறுபுலியூரில் சலசயனத்து
ஏர் ஆர், Eer Ar - அழகுமிக்க
முகில்வண்ணன் தன்னை, Mukilvannan Thannai - மேகம்போன்ற திருநிறத்தையுடையனாய்
இமையோர் பெருமானை, Imaiyor Perumanai - நித்யஸூரிகட்குத் தலைவனான திருமாலைக்குறித்து,-
கார் ஆர் வயல் மங்கைக்கு, Kar Ar Vayal Mangaiyku - கருமைபொருந்திய கழனிகளையுடைய திருமங்கை நாட்டுக்கு
இறை, Irai - தலைவரான
கலியன், Kaliyan - ஆழ்வார்
ஒலி, Oli - அருளிச்செய்த
மாலை இவை, Malai Ivai - இச்சொல் மாலைகளை
பாரார், Paarar - பூமியிலுள்ளவர்கள்
பரவி, Paravi - சொல்லி
தொழ, Thozha - (அப்பெருமானைத்) தொழுமளவில்
பாவம், Paavam - பாவங்கள்
பயிலா, Payila - நிற்கமாட்டா (தொலைந்துபோம்)