திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1639 | பெரிய திருமொழி || (7-10–பெரும் புறக்கடலை) (திரு கண்ணமங்கை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நிரதிசய போக்கியம் ஆனவனை –நெருக்கிக் கார்யம் கொள்ள வேண்டாதே அப்போதே பருகலாம்படி இருக்கிற கரும்பில் ராசம்சம் ஆனவனை – ஸ்ரீ கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே) 2 | மெய்ந்நலத் தவத்தைத் திவத்தைத் தரும் மெய்யை பொய்யினைக் கையிலோர் சங்குடை
மைந்நிறக் கடலை கடல் வண்ணனை மாலை ஆலிலைப் பள்ளிகொள் மாயனை
நென்னலைப் பகலை யிற்றை நாளினை நாளையாய் வரும் திங்களை யாண்டினைக்
கன்னலைக் கரும்பினிடைத் தேறலைக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-2 | பதவுரை Show / Hideமெய் நலம் தவத்தை, Mei Nalam Thavathai - மெய்யாய் நன்றான பக்தியோகத்திற்கு ப்ரவர்த்தகனும் (- (கண்ணமங்கையுள் கண்டுகொண்டேன்-.)) திவத்தை தரும் மெய்யை, Thivaththai Tarum Meiyyai - பரமபதமளிக்வல்ல ப்ரபத்தி யோகத்திற்கு ப்ரவர்த்தகனும் பொய்யினை, Poyyinai - (அன்பில்லாதார்க்குப்) பொய்யனாயிருப்பவனும் கையில் ஓர் சங்கு உடை, Kaiyil Oru Sangu Udai - திருக்கையில் ஒப்பற்ற ஸ்ரீபாஞ்சஜந்யத்தை யுடையவனும் மை நிறம் கடலை, Mai Niram Kadalai - கறுத்த நிறத்தையுடை கடல்போன்றவனும் கடல் வண்ணனை, Kadal Vannana - கடல்போல் கம்பீர ஸ்வபாவமுள்ளவனும் மாலை, Malai - எல்லாரினும் மேம்பட்டவனும் ஆலிலை பள்ளி கொள் மாயனை, Aalilai Palli Kol Mayanai - ஆலந்தளிரில் பள்ளி கொண்ட ஆச்சரியனும் நென்னலை பகலை, Nennalai Pakalai - நேற்றைப்போதில் அநுபவிக்க்பபட்ட வஸ்துபோல் நெஞ்சை விட்டகலாத போக்யதையை யுடையவனும் இற்றை நாளினை, Ittai Naalhinai - இன்று அநுபவிக்கப்படுகிற வஸ்து போன்றவனும் நாளையாய் வரும், Naalaiyaai Varum - மேலுள்ள காலமும் இப்படியே அனுபவிக்க வுரியவனானவனும் திங்களை, Thingkalai - மாஸத்துக்கு நிர்வாஹகனும் ஆண்டினை, Aandhinai - ஸம்வத்ஸரத்துக்கு நிர்வாஹகனும் கன்னலை, Kannalai - கன்னற்கட்டி போன்றவனும் கரும்பினிடை தேறலை, Karumbinidai Therilai - கரும்புத் தடியிலுண்டான சாறுபோன்றவனுமான பெருமானை |