திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1640 | பெரிய திருமொழி || (7-10–பெரும் புறக்கடலை) (திரு கண்ணமங்கை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அசாதாரணமான விக்ரஹத்தோடே ஸ்ரீ திருமலையிலே ஏக தேசமாய் இருக்கிறவனை – நசையை உடையோமாய்க் கொண்டு நம்மாலே ஆஸ்ரயிக்கப்படுகிற போக யோக்யமான காலம் ஆனவனை – அதுக்கு உறுப்பாக த்ரவ்யார்ஜனத்து ஈடான காலம் ஆனவனை சென்று நாடி ஸ்ரீ கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே) 3 | எங்களுக்கு அருள் செய்கின்ற வீசனை வாசவார் குழலாள் மலி மங்கை தன்னை
பங்கனைப் பங்கில் வைத்து உகந்தான் தன்னைப் பான்மையைப் பனிமா மதி யந்தவள்
மங்குலைச் சுடரை வடமா மலை யுச்சியைநச்சி நாம் வணங்கப் படும்
கங்குலைப் பகலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-3 | பதவுரை Show / Hideஎங்களுக்கு, Engalukkum - எங்கள் விஷயத்தில் (- (சென்று நாடி கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன்-,)) அருள் செய்கின்ற, Arul Seigindra - கிருபை பண்ணுகிற ஸர்வேச்வரனும் வாசம் வார் குழலாள், Vaasam Vaar Kuzhalal - பரிமளம் விசா நின்றுள்ள கூந்தலையுடையவளான மலை மங்கை தன் பங்கனை, Malai Mangai Than Panganai - பார்வதியைத் தனக்குப் பாதிபாகமாக வுடையவனான ருத்ரனை பங்கில் வைத்து உகந்தான் தன்னை, Pangil Vaiththu Ugandhaan Thannai - தனது ஒரு பக்கத்திலே (இடஙகொடுத்து) வைத்து உகந்திருப்பவனும் பான்மையை, Paanmaiyai - இப்படிப்பட்ட சீல குணமே ஸ்வபாவமாயுள்ளவனும் பனி மா மதியம் தவழ் மங்குலை, Pani Maa Madhiyam Thavazh Mangulai - குளிர்ந்த பூரணசந்திரன் தவழப்பெற்ற ஆகாசமாய் நிற்பவனும் சுடரை, Sudarai - ஸூர்யனக்கு அந்தர்யாமியா யிருப்பவனும் வட மா மலை உச்சியை, Vada Maa Malai Uchiye - வேங்கட மலையின் கிகரந் தானாயிருப்பவனும் நச்சி நாம் வணங்கப்படும், Nachchi Naam Vanangappadum - நம்மால் விரும்பி வணங்கப் படுபவனும் கங்குலை, Gangulai - இராப்பொழுதுக்கு ப்ரவர்த்தகனும் பகலை, Pagalai - பகற்பொழுதுக்கு ப்ரவர்த்தகனுமான பெருமானை |