திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1645 | பெரிய திருமொழி || (7-10–பெரும் புறக்கடலை) (திரு கண்ணமங்கை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நிருபாதிக சேஷியை-தன் பக்கல் ஆசை உடையார் தலை மேலே நிற்கிறவனாய்- அது தான் பெறாப் பேறாக நினைத்து பூர்ணனாய் இருக்கிறவனை – கம்சனுடைய துரபிசந்தியை அவன் தன்னோடு போக்கி உகவாதாரோடு செவ்வை அழியப் பரிமாறுமவனை – ஸ்ரீ கண்ண மங்கையுள் கண்டேனே) 8 | வெஞ்சினக் களிற்றை விளங்காய் வீழக் கன்று வீசிய வீசனை பேய் மகள் துஞ்ச
நஞ்சு சுவைத்துண்ட தோன்றலைத் தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய
நஞ்சினை அமுதத்தினை நாதனை நச்சுவார் உச்சியில் நிற்கும் நம்பியைக்
கஞ்சனைத் துஞ்சவஞ்சித்த வஞ்சனைக் கண்ண மங்கையுள் கண்டேனே –7-10-8 | பதவுரை Show / Hideவெம் சினம் களிற்றை, Vem Sinam Kalirrai - கொடிய கோபத்தையுடைய மதயானை போன்றவனும் (- (கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன்-.)) விளங்காய் வீழ, Vilangai Veezha - (அஸுரனாவேசித்த) விளாமரத்தின் காய்கள் உதிர்ந்து விழும்படி கன்று, Kanru - (அஸுரனானவொரு) கன்றை வீசிய, Veesiya - தூக்கியெறிந்த ஈசனை, Eesanai - ஸ்வாமியும் பேய் மகள், Pei Makal - (பூதனையென்னும்) பேய்ச்சியானவள் துஞ்ச, Thunja - முடியும்படி நஞ்சு, Nanju - (அவளது முலையில் தடவியிருந்த) விஷத்தை சுவைத்து உண்ட, Suvaithu Unda - ருசிபார்த்து (உயிருடன்) கவர்ந்த தோன்றலை, Thonralai - இளமகனும், தோன்றல் வாள் அரக்கன் கெட, Thonral Vaal Arakkan Keda - (இலங்கைக்கு) அரசனாய் வாட் படையையுடையனான இராவணன் மாளும்படி தோன்றிய, Thonriya - திருவவதரித்த நஞ்சினை, Nanjinai - விஷம்போன்றவனும், அமுதத்தினை, Amudhatthinai - (அன்பர்க்கு) ஆராவமுதமாயிருப்பவனும் நாதனை, Nadhanai - ஸர்வசேஷியாயிருப்பவனும் நச்சுவார் உச்சி மேல் நிற்கும் நம்பியை, Nachchuvaar Uchi Mael Nirkum Nambiyai - தன்னை ஆசைப்படுமவர்களின் தலைமீது நிற்கின்ற பரி பூர்ணனும் கஞ்சனை துஞ்ச வஞ்சித்த வஞ்சனை, Kanjanai Thunja Vanchiththa Vanchanai - கம்ஸன் முடியும்படி அவனை வஞ்சித்த வஞ்சகனுமான பெருமானை |