திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1646 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1646பெரிய திருமொழி || (7-10–பெரும் புறக்கடலை) (திரு கண்ணமங்கை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரிதர் பக்கலிலே வ்யாமோஹமே வடிவாய் இருக்கிறவனை–ததாமி புத்தியோகம் தம் -என்கிறபடியே தன்னைப் பிராபிக்கைக்கு ஈடான புத்தி யோகத்தை கொடுக்குமவனை – வேதத்தை எங்கும் ஒக்க அதிகரித்து இருப்பார்க்கு தன்னை ஒழிய பதார்த்த தர்சனம் பண்ண ஒண்ணாத படி அவர்களுக்கு -திருஷ்டி பூதனாய் உள்ளவனை – காணப் பெறாமையால் உறாவின கண்களின் உறாவுதல் தீரும்படி -நின்று கண்டு அனுபவிக்கப் பெற்றேன்) 9
பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுருவாய் நின்ற விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி தன்னை மண்ணினை மலையை யலைநீரினை மாலை மா மதியை மறையோர் தங்கள் கண்ணினைக் கண்கள் ஆர அளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-9
பதவுரை Show / Hide
பண்ணினை, Panninai - ஸங்கீதம் போல் இனியனானவனும் (- (கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன்-.))
பண்ணில் நின்றது ஓர் பான்மையை, Pannil Nirandhadhu Oor Paanmai - அந்த சங்கீதத்தின் ஸாரமான தன்மைபோன்ற தன்மையை யுடையவனும்
பாலுள் நெய்யினை, Paalul Neyyinai - பாலினுள்ளே நெய் மறைந்திருப்பது போல எங்கும் மறைந்துறைகின்றவனும்
மால் உரு ஆய் நின்ற விண்ணினை, Maal Uru Aay Nirnda Vinninai - மிக்க பரப்பையுடைத்தான நித்ய விபூதிக்கு நாதனும்
விளங்கும் சுடர் சோதியை, Vilangum Sudar Sothiyai - விளங்குகின்ற பரஞ்சோதிமயமான திருமேனியையுடையவனும்
வேள்வியை, Velviyai - யாகஸ்வரூபியும்
விளக்கின் ஒளி தன்னை, Vilakkin Oli Tannai - விளக்கொளிபோலே ஸ்வயம் ப்ரகாசனும்
மண்ணினை, Manninai - பூமிபோலே எல்லாவற்றையும் பொறுத்திருப்பவனும்
மலையை, Malaiyai - மலைபோல் ஒருவராலும் அசைக்க வொண்ணாதவனும்
அலை நீரினை, Alai Nirinai - தண்ணீர்போலே வேண்டுமிடங்களுக்கு வருவித்துக்கொள்ளவுரியவனும்
மாலை, Malai - அடியவரிடத்து வியாமோஹம் கொண்டிருப்பவனும்
மா மதியை, Ma Madiyai - சிறந்த புத்தியை யளிப்பவனும்
மறையோர்தங்கள் கண்ணினை, Maraiyortankal Kanninai - வைதிகர்களுக்குக் கண் போன்றிருப்பவனுமான பெருமானை
கண்கள் ஆரளவும் நின்று, Kankal Aralavum Ninru - கண்கள் த்ருப்தி பெறுமளவும் நின்று