திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1647 | பெரிய திருமொழி || (7-10–பெரும் புறக்கடலை) (திரு கண்ணமங்கை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்வதஸ் சர்வஞ்ஞனாய் இறுமாந்து இருந்தால் போகாது-என்னோடு அதிகரிக்கில் அறியலாம் ஒரு வசிஷ்டனோடே-ஒரு சாந்தீபனோடே தாழ நின்று அதிகரிக்கக் கடவ அவனுக்கு ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் உடன் அதிகரிக்கை தாழ்வோ – இவை பத்தையும் –அனுசந்திப்பார்க்கு அடைவு படச் சொல்லுகையால் உண்டான அருமையாலே வல்லராய் உபாதான லோகங்களில் போக பூமிகள் எல்லாம் புக்கு அங்கு உண்டான போகங்களைப் புஜிப்பார்கள்) 10 | கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை வல்லராய் யுரைப்பார் மதி யந்தவழ்
விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் மெய்மை சொல்லில் வெண் சங்கம் ஓன்று ஏந்திய
கண்ண நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே –7-10-10 | பதவுரை Show / Hideகலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வார் கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன் என்று, Kannamankaiyul Kandu Konden Enru - ‘திருக்கண்ணமங்கையில் (எம்பெருமானை) ஸேவிக்கப்பெற்றேன்’ என்று காதலால் உரை செய்த, Kadalal Urai Seyta - அன்புடனருளிச் செய்த வண்ணம் ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்று இவை, Vannam On Tamil Onpatotu Onru Ivai - இசையையுடைத்தாய் அழகியதான இத்தமிழ்ப் பாசுரங்ள் பத்தையும் வல்லர் ஆய் உரைப்பார், Vallar Ay Uraippar - நிபுணராய்ச் சொல்லுமவர்கள் மதியம் தவழ் விண்ணில், Madhiyam Taval Vinnil - சந்தியன் தவழப்பெற்ற மேலுலகங்களில் (சென்று) விண்ணவர் ஆய், Vinnavar Ay - தேவர்களாய் மகிழ்வு எய்துவர், Makizhvu Eytuvar - (போகங்களையநுபவித்து) ஆநந்த மடைவர்கள்; மெய்ம்மை சொல்லில், Meimmai Sollil - உண்மையாகச் சொல்லப் புகுந்தால், வெண் சங்கம் ஒன்று ஏந்திய கண்ண, Ven Sangam Onru Entin Kanna - வெண்ணிறமாய் விலக்ஷணமான ஸ்ரீ பாஞ்ச ஜந்யத்தைத் தரித்துள்ள பெருமானே! குறிப்பு ஆகில், Kurippu Agil - திருவுள்ளமாயின் கவியின் பொருள், Kaviyin Porul - இப்பாசுரங்களின் பொருள் நின் தனக்கும் கற்கலாம், Nin Tanakkum Karkalam - (ஸர்வஜ்ஞனான) உனக்கும் கேட்டுணரத்தக்கதாகும். |