திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1648 | பெரிய திருமொழி || (8-1–சிலையிலங்கு) (திரு கண்ணபுரம் 1) - (தலைமகன்பால் ஈடுபட்ட தலைமகளது செய்லகளை வினவ வந்தாருக்குத் தாய் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன் பெண் பிள்ளை சொல்லக் கடவ இது தனக்கு ரசித்த படியாலே அப்பாசுரத்தை தன் வாயாலேயும் ஒரு கால் பேசி அனுபவிக்கப் பார்க்கிறாள்) 1 | சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு ஒண் சங்கம் என்கின்றாளால்
மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண் என்கின்றாளால்
முலை இலங்கு பூம் பயலை முன்போட அன்போடு இருகின்றாளால்
கலை இலங்கு மொழியாளர் கண்ண புரத்தம்மானை கண்டாள் கொலோ –8-1-1 | பதவுரை Show / Hideசிலை, Silai - (என்றும்) ‘சார்ங்கவில்’ (- (இல்லையாகில் இப்படிப்பட்ட நிலைமை) (இவளுக்கு எப்படி உண்டாகும்!.)) இலங்கு பொன் ஆழி, Ilangu Pon Aazhi - ‘விளங்குகின்றதும் விரும்பத் தக்கதுமான திருவாழி’ (என்றும்) திண் படை, Thin Padai - ‘வலிமை பொருந்திய வாட்படை’ (என்றும்) தண்டு, Thandu - ‘கதை’ (என்றும்) ஒண் சங்கம் என்கின்றாள், On Sangam Enkindraal - ‘அழகிய சங்கு’ என்றும் சொல்லா நின்றாள், ஆல்!, Aal - இஃது என்னே! மற்று, Mattru - இன்னமும் அவனுக்கு, Avanukku - ‘அப்பெருமானுக்கு மலை இலங்கு, Malai Ilangu - மலைபோல் விளங்குகின்ற நான்கு தோளே, Naanthu Thoale - நான்கு திருத்தோள்களும் எற்றே காண், Ettrae Kaan - எப்படி அழகாயிருக்கின்றன பார்’ என்கின்றாள், Enkindraal - என்று சொல்லுகிறாள்; முலை இலங்கு, Mulai Ilangu - முலையில் விளங்குகின்ற பூ பயலை, Poo Payalai - அழகிய பசலை நிறமானது முன்பு ஓட, Munbu Oda - முன்னே சென்று வழிகாட்ட அன்பு ஓடி இருக்கின்றாள், Anbu Odi Irukkindraal - அன்பு பின் செல்லப் பெற்றிருக்கின்றாள்; கலை இலங்கு மொழி ஆளர், Kalai Ilangu Mozhi Aalar - சாஸ்த்ரப் பயிற்சி விளங்குகின்ற வாய்ப் பேச்சை யுடையவர்கள் வாழ்கிற கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்தி லெழுந்தருளியிருக்கிற அம்மானை, Ammaanai - சௌரிப்பெருமாளை கண்டாள் கொல் ஓ, Kandhaal Kol O - ஸேவிக்கப் பெற்றாளோ! |